கனெக்ட் - சிறப்புக்காட்சி பார்த்த புது ஜோடி...

கனெக்ட் - சிறப்புக்காட்சி பார்த்த புது ஜோடி...
Published on
Updated on
1 min read

90 நிமிடங்கள் ஒரு படம் ஒரு இடைவேளையும் இன்றி வெளியாக இருக்கும் முதல் 2கே படம் எது என்றால் அது, “கனெக்ட்” தான். நயன்தாரா நடிப்பில், கொரோனா லாக்டவுன் நேரத்தில் எடுக்கப்பட்ட இந்த படமானது ரசிகர்களிடம் பலத்த வரவேற்பு பெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், கனெக்ட் படத்தின் சிறப்புக் காட்சியை சென்னை தியாகராய நகரில் உள்ள கிருஷ்ணவேணி திரையரங்கில் நயன்தாரா - விக்னேஷ்சிவன் தம்பதியினர் கண்டுகளித்தனர். அஸ்வின் சரவணன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் தயாரிப்பில் கனெக்ட் படத்தில் நயன்தாரா நடித்துள்ளார்.

கொரோனா காலத்தில், தன் மகளைப் பிடித்த பேயை ஒரு தாயாக நயன்தாரா எப்படி விரட்டுகிறார் என்பதைச் சுற்றி இக்கதையம்சம் அமைக்கப்பட்டிருக்கும். சத்யராஜ், வினய் ராய், ஹனியா உள்ளிட்டோர் நடித்த இப்படம் வரும் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இவர்களது படத்திற்காக ரசிகர்கள் படு பயங்கரமாக காத்து வரும் நிலையில், தற்போது ஒரு சில தியேட்டர் உரிமையாளர்கள் விளம்பர இடைவேளை இல்லாமல் படத்தை வெளியிட்டால் தங்களுக்கு வியாபாரம் ஆகாது என நினைத்து படத்தை வெளியிட மறுப்பு தெரிவித்து வருவதாக சில சேய்திகள் வருவதால் பெரும் பரபரப்பு கிளம்பியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com