நேபாளம் வெள்ளம்: நிவேதா பெத்துராஜின் பெற்றோரைக் காணவில்லையா? உண்மை என்ன?

நேபாளம், திபேத். சீனா எல்ல பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மீட்பு குழுக்கள் அரசு அதிகாரிகள் அல்லது அங்கு நேரடியாக இருப்பவர்கள் யாரிடமாவது தகவல் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.
நேபாளம் வெள்ளம்: நிவேதா பெத்துராஜின் பெற்றோரைக் காணவில்லையா? உண்மை என்ன?
நேபாளம் வெள்ளம்: நிவேதா பெத்துராஜின் பெற்றோரைக் காணவில்லையா? உண்மை என்ன?
Published on
Updated on
1 min read

நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 400க்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காணாமல் போயிருக்கின்றனர். 103 இந்தியர்கள் நிலை வெள்ளத்தில் சிக்கியுள்ளனர்.

இந்த நிலையில் நடிகை நிவேதா பெத்துராஜ் இன்ஸ்டாகிராம் பதிவு பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதில், "என்னுடைய பெற்றோர் டாக்டர் சுரேஷ் வெங்கடாசலம் (63) மற்றும் தங்க லட்சுமி ஜோதி மகாலிங்கம் (56) ஆகிய இருவரும் நேபாளம் திபெத் சீனா எல்லை பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தை தொடர்ந்து காணவில்லை" என்று குறிப்பிட்டு இருக்கின்றனர்.

அவர்கள் கோயம்புத்தூரை சேர்ந்த இந்தியர்கள் என்றும் மவுண்ட் கைலாஷ் யாத்திரையை முடித்துவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது தொடர்பு துண்டிக்கப்பட்டு இருந்ததாகவும் அந்த பதிவில் அவர் கூறியிருக்கிறார்.

மேலும் நேபாளம், திபேத். சீனா எல்ல பகுதியில் இருப்பவர்கள் உள்ளூர் மருத்துவமனைகள் மீட்பு குழுக்கள் அரசு அதிகாரிகள் அல்லது அங்கு நேரடியாக இருப்பவர்கள் யாரிடமாவது தகவல் இருந்தால் உடனடியாக தொடர்பு கொள்ளுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்த பதிவில் விவேக் என்பவரின் இந்திய தொலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டிருக்கிறது.

அந்த பதிவு டாக்டர் நிவேதா என்ற மற்றொரு மருத்துவரின் பெற்றோரைப் பற்றியது. நிவேதா பெத்துராஜ் அதனை பகிர்ந்திருந்ததால் பலரும் அது அவரது பெற்றோர் என்றே நினைத்துக்கொண்டனர். பலரும் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். ஆனால் அது அவருடைய பெற்றோரைப் பற்றிய பதிவு அல்ல.

அவர் மேலும் காணாமல் போன சிலரைப் பற்றிய பதிவுகளை பகிர்ந்துள்ளார். அதுபோல நிவேதா வெளியிட்ட இன்னொரு பதிவும் வைரலாகி வருகிறது. அதில் பணம் சம்பாதிப்பதை துரத்துவது, புகழை தேடுவது, மற்றவர்களின் அங்கீகாரத்தை பெறுவதற்காக ஒடுவது என நாம் வாழ்க்கையில் எவ்வளவோ விஷயங்களுக்கு பின்னால் ஓடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்துமே ஒரே நொடியில் இல்லாமல் போய்விடக் கூடியவை என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது எனக் கூறியுள்ளார்

நேபாளம் வெள்ளம்: நிவேதா பெத்துராஜின் பெற்றோரைக் காணவில்லையா? உண்மை என்ன?
"பிகினியில் ராக்கி கட்டுவதா?" - நடிகைக்கு எழுந்த விமர்சனங்கள்; ஆதரவாக நின்ற ராகுல் காந்தி - நீக்கப்பட்டதா விளம்பரம்?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com