பச்சை கலர் லிப்ஸ்டிக்...வனிதாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!

பச்சைக் கலர் லிப்ஸ்டிக்-க்கு நடிகை வனிதாவை பங்கமாய் கலாய்க்கும் நெட்டிசன்கள்...
பச்சை கலர் லிப்ஸ்டிக்...வனிதாவை பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!
Published on: 
Updated on: 
2 min read

நடிகை வனிதா பச்சை நிற டிரெஸீக்கு மேட்சாக பச்சைக் கலர் லிப்ஸ்டிக் போட்டுள்ளதை பார்த்த நெட்டிசன்கள்  கலாய்த்து வருகின்றனர்.

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படத்தின் மூலம் அறிமுகமானவர் தான் நடிகை வனிதா. பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான பிக்பாஸ்-3 நிகழ்ச்சியில் பங்கேற்ற வனிதா மக்களிடையே பிரபலமானார்.

எப்போதும் சக ஹவுஸ்மேட்டுகளுடன் சண்டையும் சச்சரவுமாக இருந்த வனிதா மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டார்.  பிறகு நிகழ்ச்சியின் பாதிலேயே Eleminate செய்யப்பட்டார் வனிதா.

இதனையடுத்து பீட்டர் பால் உடனான திருமண வாழ்க்கையில் அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கி வந்தார். அதன்பிறகு குக்வித் கோமாளி, கலக்கப் போவது யாரு? பிக்பாஸ் கொண்டாட்டம் என பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். 

அவ்வப்போது சின்னத்திரை, யூட்யூப் சேனல் என பிஸியாக இருந்த வனிதா தற்போது அனல் காற்று, 2கே அழகானது காதல், அந்தாகன், சிவப்பு மனிதர்கள், வாசுவின் கர்ப்பிணிகள், கொடூரன், காத்து. கென்னி, பிக்கப் டிராப் என 10க்கும் மேற்பட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். வனிதாவின் பிக்கப் டிராப் படத்தின் போட்டோஷூட் பெரும் வைரலானது.

இந்நிலையில், சமூக வலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக உள்ள வனிதா அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில், பச்சை நிற பார்ட்டி வியர் அணிந்து தனது மகள் ஜோவிகாவுடன் இருக்கும் போட்டோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்துள்ளார் வனிதா. இதில் வனிதா டிரெஸீக்கு மேட்சாக பச்சைக் கலர் லிப்ஸ்டிக் போட்டுள்ளார்.

இதனைப் பார்த்த நெட்டிசன்கள், இதுபோன்றெல்லாம் போஸ் கொடுக்க தனி கெத்து வேண்டும் என்றும், பலர் இதையெல்லாம் பார்க்க முடிவில்லை என்றும் வனிதாவை பங்மாய் கலாய்த்து வருகின்றனர். மேலும், வனிதாவின் இந்த பச்சை கலர் போட்டோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com