உங்க நடிப்பை கொஞ்சம் நிறுத்துங்க ஐஸ்வர்யா...என வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! அப்படி என்ன பண்ணாங்க..?

ஐஸ்வர்யா டுவிட்டரில் போட்ட பதிவுக்கு விளாசும் நெட்டிசன்கள்...!
உங்க நடிப்பை கொஞ்சம் நிறுத்துங்க ஐஸ்வர்யா...என வெச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!! அப்படி என்ன பண்ணாங்க..?
Published on
Updated on
1 min read

நடிகர் தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் சமீபத்தில்  பிரியபோவதாக அறிவித்தனர். இவர்கள் கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். திருமணமாகி 18 ஆண்டுகள் ஆன நிலையில், இருவரும் பிரியபோகிறோம் என்ற அறிக்கையை வெளியிட்டது சினிமா வட்டாரங்களில் அனைவரையும் அதிர்ச்சியடைய செய்தது. 

ஆனால் இந்த அறிவிப்புக்கு பின்னர் அவர்கள் இருவரும் அவரவர் வேலைகளில் மிகுந்த கவனம் செலுத்தி வருகின்றனர். சமீபத்தில் கூட தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டா கணக்கில் இருந்த Aishwaryaa.R.Dhanush என்ற பெயரை மாற்றி  Aishwarya Rajinikanth என்று வைத்துள்ளார்.

இந்நிலையில் தற்போது கையில் காபி கப்புடன் இருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டு தான் சந்தோஷமாக இருப்பதாக தெரிவித்துள்ளார் ஐஸ்வர்யா. இந்த புகைப்படத்தை பார்த்த நெட்டிசன்கள், நீங்கள் சந்தோஷமாக இருப்பதாக காட்டிக் கொள்ள அவசியமே வேண்டாம்.

இதையெல்லாம் நாங்கள் நம்பவே மாட்டோம். முன்பு தனுஷ் தேசிய விருது பெற்ற போது அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்து #mine #proudwife என்று இன்ஸ்டாகிராமில் சந்தோஷமாக போஸ்ட் போட்டவர் தானே நீங்கள். அப்போ அந்த சந்தோஷம் எல்லாம் பொய்யாக சொல்லி நடித்தீங்களா என்று கமெண்ட் செய்து வருகின்றனர். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com