“லவ் டுடே” இயக்குநரை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்...

சமீபத்தில் வெளீயாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வரும் “லவ் டுடே” படத்தின் இயக்குனர் பிரதீப் ரங்கநாதனை நெட்டிசன்கள் மோசமாக வறுத்தெடுத்து வருகின்றனர்.
“லவ் டுடே” இயக்குநரை வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்...
Published on
Updated on
2 min read

பலருக்கு பலவகையான ஆசைகள் கனவுகள் என எல்லாமே இருக்கும். அதிலும், இந்தியாவில் சினிமா துறை மீதான் ஆர்வமானது கடலினும் பெரிதாக இருக்கிறது. தமிழ்த்திரியுலகில் தனக்கென ஒரு இடம் பிடிக்க, பல ஆயிரம் மக்கள் தினசரி சென்னை வந்தடையும் நிலையில், வெறும் ஒரு சில படங்களின் மூலம் மட்டுமே நல்ல இடத்தை பிடிக்கும் அதிர்ஷ்டம் யாருக்கும் எளிதாக கிடைத்தது இல்லை. என்பது தான் நிதர்சண உண்மையாக இருக்கிறது.

இந்நிலையில், வெறும் ஒரே படம் மூலம் வெற்றி இயக்குனரான “பிரதீப் ரங்கநாதன்”, அடுத்த படத்திலேயே ஹீரோவாகி, அதை தானே இயக்கி, வசனம், பாடல் என அனைத்து துறைகளிலும் கலக்கிக் கொண்டிருப்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், இதற்கு முன்னரே அவர் பல முறை பல வகையான குறும்படங்கள் எடுத்து வாய்ப்பு தேடி அலைந்த கதை பலருக்கு தெரியாமல் இருந்தது. தற்பொது அவரது பழைய கதைகளை தோனிட் துருவத் தொடங்கியுள்ளனர் நெட்டிசன்கள். குறிப்பாக் அஒருவர் வளர்ந்தால், அவரை எப்படி இறக்க வேண்டும் என்பதில் தானே பலர் காவல் காத்து கிடப்பார்கள். அப்படி நெட்டிசன்கள் கண்டுபிடித்த, பிரதீப்பின் பழம் பதிவுகளை பார்க்கலாம்.

2014-ம் ஆண்டு வாட்ஸ்அப் காதல் என்ற குறும்படத்தை இயக்கிய பிரதீப், அதை பார்க்க செய்வதற்காக இயக்குநர்கள் கவுதம் மேனன், ராம், நடிகர் பிரேம்ஜி, இசையமைப்பாளர் ஹாரிஜ் ஜெயராஜ் போன்ற முன்னணி நட்சத்திரங்களுக்கு பகிர்ந்து ஆதரவை கேட்டிருந்தார். 

ஒரு பக்கம் பிரேம்ஜியிடம் கோரிக்கை வைத்த அதே பிரதீப் மறுப்பக்கம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவை பெப்பர் தூக்கலாக போட்டு வறுத்துக் கொண்டிருந்தார். 

தற்போது லவ் டுடே படத்திற்கு சிறப்பாக இசையமைத்த யுவன் சங்கர் ராஜாவை பல வருடங்களுக்கு முன்பே விமர்சித்துள்ளார் பிரதிப். மங்காத்தா பின்னணி இசை டெத் ஸ்பீடு என்ற படத்தில் இருந்து காப்பியடிக்கப்பட்டதாகவும், யுவன் ஒரு வேஸ்ட்.. ஃப்ராடு என சகட்டு மேனிக்கு பதிவிட்டுள்ளார். 

அதோடு, கிரிக்கெட் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஒரு சுயநலவாதி என்றும், தோனி ஒரு பந்தை கூட அடிக்க மாட்டார் என்றும் சமூகவலைதளப் பக்கத்தில் கெட்டவார்த்தைகளுடன் கிறுக்கித் தள்ளியிருக்கிறார். 

இதற்கெல்லாம் ஒரு படி மேலே சென்ற பிரதீப், நடிகர் விஜய்யின் ஜில்லா படத்தை பார்ப்பதற்கே சகிக்கவில்லை.. இது சுறா படத்தில் இரண்டாம் பாகம் போலவே இருப்பதாகவும், விஜய்யின் டப்பிங் படுமோசமாக உள்ளதாகவும் கூறியதையெல்லாம் தற்போது கிளறி வருகின்றனர் நெட்டிசன்கன்..2014 மற்றும் 2017-ம் ஆண்டுகளில் போட்ட பதிவுகளை மீட்டெடுத்த ரசிகர்கள், பிரதீப்பை பங்கமாக கலாய்த்து வருகின்றனர். 

கீழடி அகழ்வாராய்ச்சியைத் தோண்டுவது போல தம் வாழ்க்கையில் நடந்த பழைய சம்பவங்களையெல்லாம் தோண்டியெடுக்கும் அட்ராசிட்டி ஆய்வாளர்களால் நிலைகுலைந்து போயுள்ளார் இயக்குநர். போதாக்குறைக்கு லவ் டுடே படத்தில் தனுஷின் மேனரிசத்தையே அதிகம் பிரயோகித்து வந்ததால் தனுஷ் ரசிகர்களும் பிரதீப்பை வச்சி செஞ்சி வருகின்றனர்.

17, 18 வயதில் மெச்சூரிட்டியே இல்லாத காலத்தில் இவ்வாறு பேசியிருக்கிறேன்.. இனிமேல் இதுபோன்று நடந்து கொள்ளாமல் திருந்துவதற்கு முயற்சி செய்கிறேன் என ரசிகர்களின் கால்களில் விழுந்து பிரதீப் ரங்கநாதன் கதறியபோதும் ரசிகர்கள் விடுவதாய் இல்லை. லவ்டுடே படத்தில் காதலியிடம் மொபைல்போனைக் கொடுத்து விட்டு திணறி வரும் அதே நிலைமைதான் தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஏற்பட்டுள்ளது என ஒரு சிலர் அவர் குறித்து விமர்சித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com