திருமணம் இல்லை, மோதிரம் மாற்றவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - சுஷ்மிதா சென்

லலித் மோடியுடனான தனது காதலை ஊர்ஜிதப்பட்த்தினார் சுஷ்மிதா சென். இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட நிலையில், அவருக்கு வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
திருமணம் இல்லை, மோதிரம் மாற்றவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன் - சுஷ்மிதா சென்
Published on
Updated on
2 min read

18 வயதிலேயே பிரபஞ்ச அழகியாக 1996ம் ஆண்டு, உலக மக்களின் மனதைக் கவர்ந்த சுஷ்மிதா சென், தனது வாழ்க்கையில் பல வகையான சமூக சேவைகளில் ஈடுபட்டு வருகிறார். திருமணம் செய்துக் கொள்ளவில்லை என்றாலும், இரண்டு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

ஐபிஎல்-இன் முந்தைய தலைவரான லலித் மோடி, பல வருடங்களுக்கு முன்பு, ஐபிஎல்-இன் ஒரு போட்டி மூலம் சுஷ்மிதாவி நேரில் சந்தித்திருக்கிறார். அங்கு ஏற்பட்ட நட்பு, இன்று அடுத்தக்கட்டத்தை நோக்கி சென்றிருக்கிறது.

சமீபத்தில் மாலத்தீவில் தனது குடும்பத்துடன் விடுமுறைக்கு சென்ற லலித் மோடி, சுஷ்மிதாவுடன் நெருக்கமாக எடுத்துக் கொண்ட போட்டோக்களைப் பதிவிட்டு, தனது பார்ட்னர் என சுஷ்மிதாவை டாக் செய்திருந்தார். தனது நெகிழ்ச்சியான தருணங்களைக் குறித்துப் பதிவிட்ட லலித், “உலக சுற்றுலா முடித்து, சார்டினியா லண்டனில் இருந்து திரும்புகிறேன். எனது அழகான துணை சுஷ்மிதா சென் பற்றிக் கூறவே வேண்டாம்! இது ஒரு புதிய தொடக்கம், புதிய வாழ்க்கை. மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறேன். திருமணம் பற்றி சிந்தனை இல்லை. ஆனால், எதிர்காலத்தைத் தீர்மானிக்க முடியாது” எனக் கூறுவது போல பதிவிட்டிருந்தார்.

இதனால், இணையமே பிரளயம் ஆனது. இருவருக்குமிடையிலான பல வருட நட்புக் குறித்து பதிவிட்ட நெட்டிசன்கள், இருவரது காதலுக்காக மகிழ்ச்சி அடைந்தனர். தங்களது உறவுப் பற்றி லலித் மோடி பகிரங்கமாக வெளிப்படுத்திய நிலையில், சுஷ்மிதா தரப்பில் இருந்து எந்த ஒரு விளக்கமும் அளிக்கப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், தற்போது, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சுஷ்மிதா, தனது வாழ்க்கையின் முக்கியத் திருப்பத்தைக் குறித்து பதிவிட்டது, இணையவாசிகளுக்கு மகிழ்ச்சி தந்துள்ளது. தனது இரு மகள்களுடன் செல்ஃபீ எடுத்து பதிவிட்ட சுஷ்மிதா, “நான் மகிழ்ச்சியான இடத்தில் இருக்கிறேன். திருமணம் இல்லை, மோதிரம் மாற்றவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக இருக்கிறேன். தேவையான அளவிற்கு விளக்கம் கொடுத்து விட்டேன். என் சந்தோஷத்தில் பங்குக் கொண்ட உங்கள் அனைவருக்கும் நன்றி. பங்கு பெறாதவர்களுக்கும் நன்றி” என எழுதியிருந்தார். இதனால், நெட்டிசன்கள் படு குஷியில் ஆழ்ந்துள்ளனர். மேலும், சுஷ்மிதாவின் முன்னாள் காதலரான ரோமநும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com