"பிடாரியாக" உருவெடுக்கும் பெண்.. குழியில் இருந்து அப்படியே தூக்கும் போது.. மிரட்டிட்டாங்க! - "ஓம் காளி ஜெய் காளி" எப்படி இருக்கு
"ஓம் காளி ஜெய் காளி" எப்படி இருக்கு(4 / 5)
திரை விமர்சனம்: "ஓம் காளி ஜெய் காளி"
om kali jai kali web series review - குலசை முத்தாரம்மன் கோவிலில், நிகழும் தசரா திருவிழாவை கண்முன்னே, கொண்டுவரும் ஒரு படமாக தான் இருக்கிறது இந்த "ஓம் காளி ஜெய் காளி "1995-ஆம் ஆண்டு", தமிழ்நாட்டின் கிராமப்புறத்தில் தசரா திருவிழாவின் உற்சாகம் கலந்த ஒரு பழிவாங்கும் கதை.
இந்த வெப் சீரிஸின், முதல் காட்சியில் ஒரு புறத்தில் வனதேசத்தின் தசரா குழு(விமல் டீம்) வேடங்களை போட்டுகொண்டு காளி பூஜைக்கு செல்வதும் மறு புறத்தில் ஒரு டீம் ஒரு பெண்ணையும் அவளது கணவனையும் கொலை செய்யும் காட்சியும் காட்டப்பட்டுள்ளது .
விமல் அவர்கள் இதில் கணேசன் என்ற காதாபாத்திரத்தில் , ஒரு கூத்து கலைஞனாகவும், சாமியாடியாகவும் தோன்றி, ஒரு எம்எல்ஏ வேட்பாளரின் கொலையில் சிக்கி, பழிவாங்கும் புயலில் சுழல்கிறார். இதில் அவரது காதலி (pavani reddy) மற்றும் அவரது நண்பனை(புகழ்) இழக்கிறார்.
அந்த முதல் காட்சியில் காட்டப்படும் நீலா என்ற காதாபாத்திரத்தை மையமாக வைத்தே முழு கதையும் நகர்கிறது, கொலை செய்யும் கும்பலிடம் இருந்த அந்த பெண்ணை காப்பாற்றி காலி பூஜையின் வழக்கப்படி பிடாரியாக வனதேசத்திற்கு அழைத்து செல்கின்றனர் தசரா குழுவினர்.
பின்னர் வனதேசத்திலேயே வாழ்த்துக்கொண்டிருக்கிறாள் நீலா, ஐந்து வருடங்களுக்கு பிறகு ஒரு தசரா சமயத்தில் தான் அந்த பழைய கொலை கும்பல்,மீண்டும் நீலாவை தேட துவங்குகிறது. குலசை தசராவில் அவளை கொலை செய்ய நினைக்கும் கும்பல் கணேசன் (விமல்) காதலியையும் ,நண்பனையும் கொன்றுவிடுகிறது.
இதை அடுத்து நீலாவின் கடந்த கால கதையும் யார் அந்த கும்பல் என்பதையும் ரிவில் செய்ய தொடங்குகிறது கதைக்களம் , பின்னர் இருவரின் கொலைக்கும், நீலாவிற்கும் நியாயம் கேட்டு களத்தில் இறங்குகிறது இந்த தசரா குழு.
பணத்திற்காக தகவல் சொல்லும் காத்தாடி என்ற பெண், இவர்களோடு இணைத்து, இவர்களுக்கு கொலை செய்யும் நுணுக்கங்களை , கற்றுத்தருகிறாள் பின்னர் இவர்கள் பலி வாங்க துவங்குகின்றனர். இதில் பாசம்,கோவம், காதல்,போன்ற உணர்ச்சிகள் அதிக பங்கு வகுக்கிறது.
ஒருவருக்கு மற்றொருவர் செய்யும் துரோகமே, அவர்களுக்கு எதிரியாக வந்து நிற்கிறதையே இந்த கதை ஒரு ஒரு முறையும் நிரூபிக்கும் விதமாக அமைந்து இருக்கிறது."ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் " என்பதை சொல்கிறது.
வழக்கமான கிரைம் படங்களில் வருவது போல கதாநாயகன் ஆக்ரோஷமாக இல்லாமல் சாதுவாகவும் சிறிது அமைதியான கேரக்டராக இருப்பது இந்த "வெப் சீரிஸின் " தனி சிறப்பு என்றே சொல்லலாம் . அதே போல தெய்வங்களை வைத்து பாகுபாடு பார்க்காமல் அனைவரும் சமம் என்றால் முத்தாரம்மன் ஏற்றுக்கொள்வாள் என்பது போல சமூக ஒற்றுமையுடன் நகர்கிறது கதை.
ராஜேஷ் சுக்லாவின் ஒளிப்பதிவு, பழமையான கிராமத்தை வண்ணமயமாக்குகிறது. கலை இயக்கம், உடைகள், சண்டை காட்சிகள் - எல்லாம் ஒரு திரைப்பட அனுபவத்தை தருகிறது.
முதல் இரண்டு எபிசோடுகள் உங்களை இருக்கையின் நுனியில் அமர வைக்கும்! கிராமத்து பின்னணி, தசரா திருவிழாவின் வண்ணங்கள், கார்த்திக் ராஜாவின் இசையில் உயிர்ப்பு பெறும் பரபரப்பு - எல்லாம் ஒரு பிரமாண்டமான அனுபவத்தை உறுதியளிக்கிறது.
சில கதாபாத்திரங்கள் திரையில் சிறிது நேரம் மட்டுமே தோன்றினாலும், தங்களின் நடிப்பில் அருமையாக வெளிப்படுத்தி உள்ளனர், ஒரு நடிகர்கள் பட்டாளமே இருக்கிறது என்று சொல்லலாம் அதிலும் பல நடிகர்கள் ஏற்கனவே தமிழ் சினிமாவிற்கு நன்கு பரிச்சயமானவர்கள்.
மூன்றாவது எபிசோடு தொடங்கியவுடன், கதை தன் வேகத்தை இழக்கிறது. பழிவாங்கல், விசுவாசம், மீட்பு என்று பேசப்பட்டாலும், உணர்வு ரீதியான தொடர்பு குறைகிறது. திரைக்கதை தடுமாறுகிறது, சில இடங்களில் தேவையில்லாத வார்த்தைகளும், காட்சிகளும் நம்மை சோர்வடைய செய்கின்றன.இதுவே இந்த கதையின் மைனஸாக உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்