தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு...சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு...!

தி கேரளா ஸ்டோரி திரைப்படத்திற்கு எதிர்ப்பு...சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு...!
Published on: 
Updated on: 
1 min read

போடிநாயக்கனூரில் வரும் 5 ஆம் தேதி வெளியாகவுள்ள ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படத்தை தடை செய்யக்கோரி சுவரொட்டிகள் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நாடு முழுவதும் வரும் 5 ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று வெளியாகவுள்ள ”தி கேரளா ஸ்டோரி” திரைப்படம் கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தினருக்கு எதிராக இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக இத்திரைப்படத்தை திரையிடுவதற்கு தடை செய்யக் கோரி முக்கிய பகுதிகளில்  சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. அதேசமயம், உளவுத் துறையும் இத்திரைப்படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று அறிக்கை அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com