“இது ஏ.ஜி. ராவண ஆட்சின்னு இங்க இருக்குற பயலுகளுக்கு தெரியும்-ல”- பத்து தல வந்து விட்டார்...

பத்து தல படத்தின் டீசர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
“இது ஏ.ஜி. ராவண ஆட்சின்னு இங்க இருக்குற பயலுகளுக்கு தெரியும்-ல”- பத்து தல வந்து விட்டார்...
Published on
Updated on
1 min read

ஆத்மன் சிலம்பரசன் நடிப்பில் பத்து தல திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதற்கு ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது என்றே சொல்லலாம்.

பல வகையான எதிர்ப்புகள் பெற்று தனது சினிமா வாழ்க்கை இதோடு முடிந்து விட்டது என அனைவரும் நினைத்திருந்த நிலையில், ஈஸ்வரன் என்ற படம் மூலம், தனக்கென்று ஒரு தனி இடம் எப்போதும் சினிமாவில் உள்ளது என்பதை நிரூபித்து விட்டார் நடிகர் சிலம்பரசன்.

இந்நிலையில், வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது ஓபிலி என்.கிருஷ்ணா இயக்கத்தில், சிலம்பரசன், கௌதம் கார்த்திக், டீஜே அருணாசலம், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி ஷங்கர், கலையரசன் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படத்தின் டீசர் ஆயிரக்கணக்கில் பார்வையாளர்களை அள்ளி செல்கிறது.

நெல்லையைச் சேர்ந்த ஏ.ஜி.ராவணன், ஒரு மணல் கொள்ளை செய்து வரும் கதாபாத்திரமாக சிம்பு நடிக்க, ஒரு அரசியல்வாதியாக கௌதம் வாசுதேவ் மேனன் நடித்திருக்கிறார். பல சர்ச்சைக்குறிய வசனங்கள் கொண்ட இந்த படத்தின் டீசர், ஒரு அரசியல் படமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வருகிற மார்ச் 30ம் தேதி படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான எதிர்பார்ப்பை இந்த டீசர் அதிகரித்துள்ளது என்பது தான் உண்மை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com