
தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே செல்வமணி சென்னை வடபழனியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் யாரை வைத்து வேண்டுமானாலும் படப்பிடிப்பை நடத்திக் கொள்ளலாம் என்று அறிக்கை வெளியிட்டு உள்ளது தொடர்பாக தங்களுக்கு நேரடியாக எந்த கடிதமும் வரவில்லை என்றார்.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கும் பெப்சிக்கும் இடையேயான கருத்து வேறுபாடு தொடர்பாக நாளைய தினம் சென்னையில் பேச்சுவார்த்தை நடைபெற இருக்கிறது என்றும் செல்வமணி கூறினார். மேலும் நடிகர் அஜித் குமார் தனது திரைப்பட படப்பிடிப்பை தமிழகத்தில் நடத்த வேண்டும் என ஆர்.கே செல்வமணி வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
நடிகர் சங்க பொதுக்குழு கூட்டம் மே 8 ஆம் தேதி நடைபெற இருப்பதால் அன்று ஒரு நாள் மட்டும் சென்னையில் எந்தவொரு திரைப்பட படப்பிடிப்பும் நடைபெறாது என ஆர்.கே செல்வமணி அறிவித்திருக்கிறார்