
நடிகர் அஜித்குமார் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படத்தில் நடித்து முடித்துள்ள தல அஜித் தனது இருசக்கர வாகனத்தில் இந்தியாவை ரவுண்டிக்க ஆரம்பித்துள்ளார்.
பொதுவாக அவர் பைக் ரேசர் என்பதால் அவரது படத்தில் நிச்சயம் ஒரு சில காட்சிகளிலாவது பைக் ஸ்டண்ட் செய்து விடுவார். வலிமை படம் முழுக்க முழுக்க பைக் ஸ்டண்ட் நடத்துபவர்களின் வாழ்க்கையை குறித்து எடுக்கப்பட்டுள்ள படம் என்றும், இந்தப் படத்திற்காக ரிஸ்க் எடுத்து அவர் நிறைய ஸ்டெண்ட் காட்சிகளில் நடித்திருப்பதாகவும் கிசு கிசுக்கப்படுகிறது.
நடிகர் அஜித்தின் பட அப்டேட் மட்டுமல்ல அஜித் நிஜ வாழ்க்கையின் அப்டேட் கூட ட்விஸ்ட்டாக தான் இருந்து வருகிறது. தனது தனிப்பட்ட வாழ்க்கையை பகிர்ந்து கொள்வதை எப்போதும் அவர் விரும்ப மாட்டார். அப்படியிருந்தும் அவருடைய மற்றும் அவரது குடும்பத்தினரின் புகைப்படம் எப்போவதாக இணையத்தில் வெளியாகி வைரலாவது உண்டு. அந்த வகையில் தற்போது அஜித் தனது மகனுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.
அஜித்தின் மகனான ஆத்விக் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி நிற்க, அவர் தோள் மீது கை வைத்த படி எப்போதும் போல சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் அஜித் போஸ் கொடுத்துள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அடுத்த பைக் ரேசர் உருவாகிவிட்டார் என கொண்டாடி வருகின்றனர்.