அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’ பாடல்...

பொன்னியின் செல்வன் 2 படத்தின் முதல் பாடல் ‘ அக நக’ பாடல் வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.
அதிகாரப்பூர்வமாக வெளியாக தயாராகி வரும் ‘அக நக’  பாடல்...

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கபட்ட ஒரு மாபெரும் படைப்பு தான் ‘பொன்னியின் செல்வன்’. சுமார் 70 ஆண்டு கால தமிழ் சினிமா வரலாற்றின் பல பெரும் நட்சத்திரங்கள் எடுக்க முயற்சி செய்தும் படம் எடுக்க முடியாமல் இருந்த நிலையில், மணி ரதன்ம் இயக்கத்தில் லைகா ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளியாகிய இந்த் அபொன்னியின் செல்வன் படம், இரண்டு பாகங்களாக உருவாகி இருந்தது.

கட்ந்த ஆண்டு படத்தின் முதல் பாகம் வெளியான நிலையில், படத்தின் இரண்டாம் பாகம் தற்போது வெளியாக தயாராகி வருகிறது. வருகிற ஏப்ரல் 28 தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் வெளியாக இருக்கும் நிலையில், படத்திற்கான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, படத்தின் மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அக நக’ என்ற பாடல் தான் முதலில் வெளியாக இருக்கிறது என அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. சக்திஸ்ரீ கோபாலன் குரலில் இளங்கோ கிருஷ்ணன் வரிகளில் உருவாகியுள்ல இந்த பாடலுக்கு ஏற்கனவே பல ரசிகர்கள் உள்ள நிலையில், தற்போது அந்த இசை, முழு பாடலாக வெளியாக உள்ளதால் ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் காத்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com