ஜிம் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட டாப்ஸி.!!

ஜிம் ஒர்க் அவுட் செய்யும் புகைப்படத்தை வெளியிட்ட டாப்ஸி.!!
Published on
Updated on
1 min read

தமிழ் சினிமாவில் ஆடுகளம் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை டாப்ஸி. தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடிக்காவிட்டாலும் தனக்கான உள்ள கதாபாத்திரத்தை திறமையாக தேர்வு செய்து வருகிறார்.

ராஷ்மி ராக்கெட் என்ற படத்திற்காக ஹீரோக்களை ஆச்சரியப்படும் அளவிற்கு வெறித்தனமாக உடம்பை ஏற்றி உள்ளார். இந்நிலையில் இவர் ஜிம்மில் வொர்க் அவுட் செய்வது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாய் பரவி வருகிறது. இந்த படத்தில் விளையாட்டு வீராங்கனையாக டாப்சி நடித்துள்ளார்.

அமேசான் பிரைமில் வெளிவந்த இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. தனது படத்திற்காக நடிகர்கள் தான் உருவ மாற்றம் செய்வார்கள் ஆனால் டாப்ஸி போன்ற ஹீரோயின்கள் இதுபோன்ற ரிஸ்க் எடுப்பதை விரல் விட்டு எண்ணி விடலாம்.

டாப்ஸி தமிழில் ஜன கன மன, ஏலியன் போன்ற படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com