
தீபாவளியை முன்னிட்டு சினிமா ரசிகர்களுக்காக் பெரும் விருந்தாக வெளியான கமெர்சியல் சிவக்கார்த்திகேயன் படம் தான் “பிரின்ஸ்”. சாதாரண தொலைக்காட்சி தொகுப்பாளராக தொடங்கி, இன்று தனக்கென்று பெரிய பேனர் வைத்து, ஒரு மாபெரும் ரசிகர் கூட்டம் சம்பாதித்து வைத்திருக்கும் சிவகார்த்திகேயன் படம், முதல் முறையாக, பெரும் நடிகர்களுக்கு தரக்கூடிய ஓப்பனிங் போல, பிரம்மாண்ட வரவேற்போடு தான் இந்த படம் வெளியானது.
மேலும் படிக்க | சிவகார்த்திகேயனின் ’பிரின்ஸ்’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம்...!
அனால், வெளியான படம் மிகவும் மோசமான விமர்சனங்களைப் பெற்று வரும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது, சிவகார்த்திகேயன் ரசிகர்கள் மட்டுமல்லாமல், அனைத்து சினிமா ரசிகர்களுக்கும் பெரும் ஆதங்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தீபாவளி என்றால், புதுத்துணிகள், பட்டாசுகள், இனிப்புகள் மட்டுமல்ல, புதுப்படங்களும் தான். அதிலும் பொதுவாக ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பெரும் நடிகர்களின் படத்திற்காக பல நாட்கள் காத்திருந்து, தல தீபாவளி கொண்டாடிய பேச்லர் ரசிகர்களும் உண்டு.