கேப்டன் மில்லர் படத்தில் இணைகிறார் பிரியங்கா மோகன்!

தனுஷின் புதிய படமான கேப்டன் மில்லர் படத்தில், பிரியங்கா மோஹன் இணைந்துள்ளார். இதன் அதிகாரப்பூர்வ தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது.
கேப்டன் மில்லர் படத்தில் இணைகிறார் பிரியங்கா மோகன்!
Published on
Updated on
1 min read

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், கேப்டன் மில்லர் என்று தலைப்பிடப்பட்ட படத்தில், தனுஷ் நடிக்கிறார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த சில கசப்பான அனுபவங்கள் தாண்டி, மீண்டும் சினிமாவில் தனது முழு கவனத்தை செலுத்தியுள்ள தனுஷ், அடுத்தடுத்து பல படங்கள் தனது கைகளில் கொண்டுள்ளார்.

அந்த வகையில், சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், தனுஷ் நடிக்கும் படம் தான் ‘கேப்டன் மில்லர்’. சமீபத்தில், படத்தின் போஸ்டர் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்ற நிலையில், படம் குறித்த எத்ரபார்ப்பு அதிகரித்து. இன்று மாலை 5 மணி அளவில் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாக இருப்பதாக பதிவிட்ட படத்தின் தயாரிப்பு நிறுவனம், நடிகை பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்கிறார் என பதிவிட்டுள்ளது.

தற்போது, நடிகர் தனுஷ், ‘கேப்டன் மில்லர்’ படத்தில் தனது லுக்-கை பகிர்ந்து, ரசிகர்களுக்கு உற்சாகம் அளித்த நிலையில், தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல், படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும், ரசிகர்கள், பிரியங்காவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com