விறுவிறுப்பாக நடக்கும் தி லெஜெண்ட் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள்:

தி லெஜெண்ட் திரைப்படத்தின் ப்ரோமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கும் நிலையில், கன்னட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது.
விறுவிறுப்பாக நடக்கும் தி லெஜெண்ட் படத்தின் ப்ரொமோஷன் வேலைகள்:
Published on
Updated on
1 min read

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜ்ஜியத்தை நடத்தி வந்த தி லெஜெண்ட் சரவணன் தற்போது தி லெஜெண்ட் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். தி லெஜெண்ட் ப்ரோடுக்க்ஷன்ஸ் தயாரிப்பில் ஜேடி & ஜெர்ரி இயக்கியுள்ளனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள படத்தின் இசை உரிமையை திங்க் மியூசிக் நிறுவனம் பெற்றுள்ளது. படத்தில் தி லெஜெண்ட் சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரௌட்டலா நடித்துள்ளார். மேலும் படத்தில், பிரபு, விவேக்,மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் என பெரிய நட்சத்த்திர பட்டாளமே நடித்துள்ளனர். படத்தின் first லுக் போஸ்டர் வெளியானதில் இருந்தே படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. படத்தின் பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். மேலும் படத்தில் இருந்து மொசலோ மொசலு பாடலும், வாடி வாசல் பாடலும், போ போ போ பாடலும் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. கடந்த மே மாதம் 29 ம் தேதி படத்தின் தமிழ் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது.  

தி லெஜெண்ட் திரைப்படம், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என 5 மொழிகளில் ஜூலை 28 ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது. தி லெஜெண்ட் சரவெடி என்ற தலைப்பில் படத்தின் புது ட்ரைலர் தமிழ், ஹிந்தியில் வெளியான நிலையில், நேற்று, தி லெஜெண்ட் படத்தின் புது தெலுங்கு ட்ரைலர் நேற்று வெளியானது.  இது தெலுங்கு ரசிகர்களிடையே நல்ல பாராட்டுகளை பெற்று வருகிறது. 

இந்நிலையில், தற்போது தி லெஜெண்ட் சரவெடி தலைப்பில் கன்னட படத்தின் புது ட்ரைலர் இன்று மாலை 4 மணிக்கு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் கன்னட செய்தியாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில், தி லெஜெண்ட் சரவணன், ஊர்வஷி ரௌட்டலா, ராய் லக்ஷ்மி ஆகியோர் கலந்துகொண்டனர்.  மேலும் ரசிகர்கள் படத்திற்காக காத்திருப்பதாகவும், தங்களது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com