பன்வர்சிங் ஷிகாவத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா ரசிகர்கள்!!

அல்லுஅர்ஜூன், ரஷ்மிகா மந்தனா, பஹத் பாஸில் ஆகிய நச்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். ரூபாய் 250 கோடி பொருட்செலவில் உருவான இந்த திரைபடம் பாக்ஸ் ஆஃபிஸில் ரூபாய் 373 கோடியை ஈட்டியது
பன்வர்சிங் ஷிகாவத்திற்காக காத்துக்கொண்டிருக்கும் புஷ்பா ரசிகர்கள்!!
Published on
Updated on
1 min read

செம்மரக் கடத்தலில் கதாநாயகன் :

இத்திரைப்படத்தின் கதைக்களம் செம்மர கடத்தலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது.  இக்கதையில் கடத்தல் வேலைகளுக்காக வில்லனிடம் கூலியாக சேர்ந்த கதாநாயகன் புஷ்பா பின்னாளில் கடத்தல் சாம்ராஜ்யத்துக்கு எப்படி அரசனாகிறான் என்பது தான் கதை.  செம்மர கடத்தலில் போட்டி, பொறாமை, பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதிலிருந்து எப்படி சாமர்த்தியமாக நாயகன் மீண்டு வருகிறார் என்பதே புஷ்பா (தி ரைஸ்) முதல் பாகத்தின் கதை.  சண்டை, காதல், காமெடி என கமர்சியல் திரைப்படமாக உருவாகிய புஷ்பா அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது.

சமூகவலைத்தளங்களில் வலம் வந்த புஷ்பா வசனங்கள்         

புஷ்பா திரைப்படத்தில் உள்ள பாடல்கள், வசனங்கள் இளையஞர்களிடையே  மிகுந்த வைரலாகிய நிலையில்  சமூகவலைதளங்களில்   சிறியவர் பெரியவர் என்ற பாகுபாடின்றி  ரீல்ஸ்  செய்து பதிவிடுகின்றனர். (குறிப்பாக  புஷ்பானா  ப்ளவருனு  நெனச்சீங்களா ஃபயரு) இந்த வசனத்திற்கு  தனி ரசிகர் பட்டாளமே  உள்ளது. 

பரபரப்பாக தயாராகும் புஷ்பா பாகம் 2: 

புஷ்பா (தி ரைஸ் )  புஷ்பாவிற்கும் பன்வர்சிங் ஷிகாவத்திற்கும் இடையே என்ன நடக்கும்? என்று  முதல் பாகத்தில் எழுந்த கேள்விகளுக்கு பதிலாக  (புஷ்பா தி ரூல் ) இந்தாண்டு இரண்டாம் பாகம் வெளியாகும் என்று திரைபடக்குழுவினர்  தெரிவித்துள்ளனர். இது ரசிகர்களின் ஆர்வத்தை  அதிகரித்திருக்கிறது. முதல் பாகத்தில்  சிறிது நேரமே  தோன்றி ரசிகர்களின் மனதை ஈர்த்த பகத் பாஸிலின்  கதாபாத்திரமான  பன்வர் சிங்கினை எதிர்பார்த்து  கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு  புஷ்பா இரண்டாம் பாகம் பெரிய விருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை.

-சுவாதிகா ராஜன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com