விக்ரமாதித்யா யார்? பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி!

விக்ரமாதித்யா யார்? பிரபாஸின் புதிய போஸ்டரோடு வெளியான 'ராதே ஷியாம்' டீசர் ரிலீஸ் தேதி!
Published on: 
Updated on: 
1 min read

வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும் ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் உருவாகி வரும் பிரபாஸ் நடிக்கும் ராதே ஷியாம் படத்தின் சிறப்பு டீசர் அக்டோபர் 23 ஆம் தேதி வெளியாக உள்ளது. 

பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் ராதே ஷியாம், ரசிகர்களிடையே பலத்த எதிர்பார்ப்பு உள்ளது என்பது நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் அக்டோபர் 23 அன்று டீசர் வெளியாவதை அறிவிக்கும் வகையில் போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். ஸ்டைலான போஸில் பிரபாஸ் எதையோ யோசிப்பதை போன்றும் விக்ரமாதித்யா யார்?' என்ற கேள்வியோடு இது வெளியாகியுள்ளது.

பல்வேறு மொழிகளில் அடுத்த வருடம் ஜனவரி  14 ஆம் தேதி  'ராதே ஷியாம்' திரைப்படம் வெளியாகவுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com