'காஞ்சனா 4' : அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

'காஞ்சனா 4' : அப்டேட் கொடுத்த ராகவா லாரன்ஸ்

ராகவா லாரன்ஸ் 'காஞ்சனா 4' திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று அப்டேட் கொடுத்துள்ளார். ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கிய 'காஞ்சனா' திரைப்படம் கடந்த 2011-ம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2015-ல் 'காஞ்சனா 2' மற்றும் 2019-ல் 'காஞ்சனா 3' என அடுத்தடுத்த பாகங்களை ராகவா லாரன்ஸ் இயக்கினார். இந்த நிலையில், தற்போது செய்தியாளர்களின் சந்திப்பின்போது 'காஞ்சனா 4' படத்திற்கான அப்டேட்டை ராகவா லாரன்ஸ் வெளியிட்டார். அப்போது அவர் கூறுகையில், 'தற்போது பென்ஸ் படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். 'காஞ்சனா 4' கதையை எழுதி முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் தொடங்கும்' என்றார்.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com