பத்து தல படத்தில் நடிக்க மறுத்த ரஜினி.... காரணம் கூறிய இயக்குனர்!!!

பத்து தல படத்தில் நடிக்க மறுத்த ரஜினி.... காரணம் கூறிய இயக்குனர்!!!

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல படத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததற்கான காரணத்தை தயாரிப்பாளர் வெளியிட்டுள்ளார்.

சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை போன்ற படங்களை இயக்கியவர் ஒபிலி என் கிருஷ்ணா.  இவர் நீண்ட இடைவெளிக்கு பின் இயக்கியுள்ள திரைப்படம் பத்து தல.  இது கன்னடத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன முஃப்டி படத்தை தழுவி இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது.  இதில் ஏஜிஆர் என்கிற கேங்ஸ்டர் கதாபாத்திரத்தில் சிம்பு நடித்துள்ளார்.  மணல் மாஃபியாவை மையமாக வைத்து இப்படம் தயாராகி உள்ளது.

பத்து தல படத்தில் சிம்பு உடன் பிரியா பவானி சங்கர், கவுதம் கார்த்திக், டிஜே அருணாச்சலம், கவுதம் மேனன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இது தவிர நடிகர் ஆர்யாவின் மனைவி சாயிஷாவும் இப்படத்தில் ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி இருக்கிறார்.  பத்து தல படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து உள்ளார்.  இப்படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் சார்பாக கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்து இருக்கிறார்.

பத்து தல திரைப்படம் வருகிற மார்ச் 30-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது.   இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், அதற்கான புரமோஷன் பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.  அதன்படி இப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பத்து தல படத்திற்காக பல்வேறு பேட்டிகளை கொடுத்துள்ளார்.  அந்த வகையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் பத்து தல படத்தில் ரஜினிகாந்த் நடிக்க மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

கன்னடத்தில் வெளியான முஃப்டி திரைப்படத்தை அப்படியே ரீமேக் செய்ய தான் முதலில் முடிவெடுத்திருந்தனர்.  அப்படத்தில் கன்னட சூப்பர்ஸ்டார் ஷிவ ராஜ்குமார் நடித்த வேடத்தில் தமிழில் ரஜினிகாந்தை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார்களாம்.  இதுகுறித்து ரஜினியை அணுகியபோது அவர் நடிக்க மறுத்துவிட்டாராம்.  ரீமேக் படம் என்கிற ஒரே காரணத்துக்காக இப்படத்தில் நடிக்க ரஜினி மறுத்துவிட்டாராம்.  இதையடுத்து தான் இந்த படத்தில் சிம்புவை நடிக்க வைத்ததாக ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com