ட்விட்டரில் டிபி மாற்றி நெட்டிசன்களால் கலாய் வாங்கும் சூப்பர் ஸ்டார்!

ட்விட்டரில் டிபி மாற்றி நெட்டிசன்களால் கலாய் வாங்கும் சூப்பர் ஸ்டார்!
Published on
Updated on
2 min read

சுமார் 25 வருடங்களுக்கும் மேலாக, அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லிக் கொண்டிருந்த தென்னிந்திய திரையுலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த, தற்போது அரசியலில் குதித்து விட்டார். அது வரை அவர் பேசியது அனைத்தும் தனிப்பட்ட கருத்துகளாகவே பார்க்கப்பட, தற்போது அவர் நின்றாலும், அசைந்தாலும், நடந்தாலும், அதற்கான அரசியல் பின்னணி என்ன என்ற கேள்வி தான் மக்களிடையே நிலைநின்றுள்ளது.

ஆளுநரிடம் ஆலோசனை:

இந்த வரிசையில், சமீபத்தில், நமது தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து அரசியல் பேசியதை அடுத்து, பாஜக பக்கம் சாய்கிறாரா ரஜினி என்றும், ஆளுநரிடம் நடக்க போகும் தேர்தல் குறித்து பேசினாரா என்றெல்லாம் பல வகையான கேள்விகள் கிளம்ப துவங்கின. மேலும், தனது அரசியல் பிரவேசத்திற்கான அஜெண்டாவே ஆன்மீக அரசியல் தான் என்று கூறியதாலோ என்னவோ, அவர் முழு நேர ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளராகவே சிலரால் விமர்சிக்கப்படும் நிலைக்கு தள்ளப்பட்டார்.

தேசிய கொடி டிபி:

இந்த நிலையில், தற்போது, 75வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் இந்தியாவின் 75 வது சுதந்திர தினத்தை பிரம்மாண்டமாகக் கொண்டாட, இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ஒரு சில கோரிக்கைகளை மக்கள் முன்னிலையில் வைத்தார். அதில் ஒன்று தான் பொது மக்கள் தங்கலது சோசியல் மீடியா கணக்குகளில் தங்களது விவரப் படங்கள் அதாவது டிஸ்ப்ளே பிக்சரை, இந்தியக் கொடியாக மாற்ற வேண்டும் என்பது. பல பிரபலங்கள் தொடங்கி, பொது மக்கள் வரை, ஏன் பிரபல மீம் பக்கங்கள் கூட தங்களது டிபி-யை மூவர்ண கொடியாக மாற்றி, தங்களது தேசப்பற்றை வெளிப்படுத்தியும், தேசியக் கொடி மீதான தங்களது மரியாதை காட்டும் நிமித்தமாகவும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

டிபி மாற்றிய சூப்பர் ஸ்டார்:

அதே போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும், தனது டிபி யை மூவர்ண கொடியாக மாற்றி, தனது மரியாதையை வெளிப்படுத்தியுள்ளார். ரசிகர்களுக்கு முன்னொடியாக விளங்குவதாக பலரால் ரஜினி போற்றப்பட்டாலும், ஒரு சிலர் அவரை கேளி செய்து வருகின்றனர். இவர் டிபி மாற்றியதை ஊடகவியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் செய்திகளாக வெளியிட்டனர். அதற்கு கமெண்ட் செய்த நெட்டிசன்கள், ரஜினியை சங்கி என்றும், வலதுசாரி என்று பங்கமாக கலய்த்து வருகின்றனர். மேலும், பிரபல நடிகை மற்றும் டாக்டரான ஷர்மிளா, தனது ட்விட்டர் பக்கத்தில், “ரொம்ப முக்கியம்!” என, இது தொடர்பான செய்தியைப் பகிர்ந்து கேளியாக பதிவு செய்துள்ளார்.

இது தொடர்பான செய்திகள் தற்போது இணைத்தில் படு வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com