எலியும் பூனையுமாக இருந்த பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து ”தோட்டாவாக” மாறிய ஆல்பம் வெளியானது!

ரம்யா பாண்டியன் - ரியோ ராஜ் இணைந்து நடித்த “தோட்டா” என்ற ஆல்பத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.
எலியும் பூனையுமாக இருந்த பிக்பாஸ் பிரபலங்கள் இணைந்து ”தோட்டாவாக” மாறிய ஆல்பம் வெளியானது!
Published on
Updated on
2 min read

பிக்பாஸ் சீசன் 4-ல் போட்டியாளர்களாக இருந்த ரியோ ராஜ் மற்றும் ரம்யா பாண்டியன் இருவரும் இணைந்து ஆல்பத்தில் நடித்துள்ளனர். பிக்பாஸில் எலியும் பூனையுமாக அடித்துக்கொண்டே இருந்த இருவரும் தற்போது  “தோட்டா” என்ற ஆல்பத்தில் ஒன்றாக நடனம் ஆடியுள்ளனர்.

இந்த ஆல்பம் Noise and Grains என்ற பிரபல யூடியூப் சேனலின் தயாரிப்பாம். இந்நிலையில் இந்த ஆல்பத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

தற்போது வைரலாகி வரும் ரம்யா பாண்டியன் மற்றும் ரியோ ராஜ் இருவரின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்ரை தனிதனியாக வெளியிட்டுள்ள நிலையில், அதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

அதுமட்டுமில்லாமல், ரம்யா பாண்டியன் இந்த போஸ்டரில் மிக அழகாகவும் செம காஸ்ட்யூமில் இருப்பதாகவும், அதேபோல் ரியோ ராஜ் ஸ்டைலாக மாஸ் காட்டுவதாகவும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த ஆல்பம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் தற்போது இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com