சின்னத்திரையில் அறிமுகமாகும் ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிரபல டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.
சின்னத்திரையில் அறிமுகமாகும் ரன்வீர் சிங்

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் பிரபல டிவி சேனலில் நிகழ்ச்சி தொகுத்து வழங்க உள்ளதாக தகவல் பரவி வருகிறது.

பாலிவுட்டில் நட்சத்திர நடிகராக வலம் வரும் ரன்வீர் சிங், பல வெற்றிப் படங்களில் நடித்துள்ளார். 2018-ல் பிரபல நடிகை தீபிகா படுகோனைத் திருமணம் செய்துகொண்டார். பாலிவுட்டில் பிஸியாக இருக்கும் ரன்வீர் சிங், ஷங்கர் இயக்கவுள்ள அந்நியன் ஹிந்தி ரீமேக்கில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.

இந்நிலையில் கலர்ஸ் டிவி ஒளிபரப்பாகும் தி பிக் பிக்சர் என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கிறார் ரன்வீர் சிங். இதன்மூலம் சின்னத்திரையில் அவர் அறிமுகமாகிறார். 

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com