வித்தியாசமான போட்டோஷூட் செய்த ரன்வீர் சிங்; நெட்டிசன்களின் இலக்காகும் தீபிகா படுகோனே!

வித்தியாசமான போட்டோஷூட் செய்த ரன்வீர் சிங்; நெட்டிசன்களின் இலக்காகும் தீபிகா படுகோனே!

ஒரு சில இந்தியர்கள் தான் தனித்துவத்தை தைரியமாக வெளிப்படுத்துவர். அதிலும், ஆடைகள் பற்றியோ, தனது வித்தியாசமான நடவடிக்கைகள் பற்றியோ எவ்வித கவலையும் இன்றி, தனது வாழ்க்கையித் தனக்குப் பிடித்தது போல வாழ்ந்து வரும் பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், தான் இருக்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் ஏதாவது ஒரு வகையில், கவனம் ஈர்த்து விடுவார். அதனால், பல சர்ச்சைகளிலும் சிக்குவதை வழக்கமாக வைத்திருப்பவர் தான் ரன்வீர்.

நடிகை தீபிகா படுகோனேவை காதல் திருமணம் செய்த ரன்வீர், தனது ஃபேஷன் திறனை மிகவும் வித்தியாசமான, மற்றும் விமர்சனத்திற்குறிய வகையில் வெளிப்படுத்தி வருகிறார். நீளமான ஸ்கர்ட்டுகள், பாவடை தாவணி, வித விதமான கண்ணைப் பறிக்கும் வண்ணங்களில் உடைகள் என, எப்போதும், பேசுபொருளாக இருக்கிறார். மேலும், அவர் அணியும் சில ஆடைகள், அவரது மனைவி தீபிக்காவுடையது என்றெல்லாம், பலர் கேலி செய்ததும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், சமீப நாட்களாக எந்த சர்ச்சைக்குள்ளும் சிக்காமல் இருந்த நடிகர் ரன்வீர், ஒரு போட்டோஷூட்டை வெளியிட்டு, ஒட்டு மொத்த இணையத்தின் கவனத்தையும் பெற்றுவிட்டார். பிரபல சர்வதேச பதிப்பான தி பேப்பர் மேகசீனின் கவர் பிக்-குக்காக போட்டோஷூட் செய்த ரன்வீர், நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தார்.

அந்த போட்டோக்கள் இணையத்தில் வைரலாக, பல தரப்பினரிடமிருந்தும் விமர்சனங்கள் பறந்து வருகின்றன. அமெரிக்காவில், தனது தனிப்பட்ட வீடியோக்களும், போட்டோக்களும் பதிவிட்டு இன்று முன்னணி பிரபலங்களில் ஒருவராக இருக்கும் கார்டேஷியன்களைப் போல, ரனிவீரும் ஆக முயற்சி செய்கிறார் என்றெல்லாம் விமர்சித்து வரும் நிலையில், அவரது மனைவி தீபிகாவை நெட்டிசன்கள் மோசமாக கேலி செய்து வருகின்றனர். தனது அலமாறியையும், தனது ஆடைகளையும், தீபிகா தர மறுத்ததால் தான் ரன்வீர் இந்த நிலைக்குத் தள்ளப்பட்டார் என ஒரு சில மீம்களும் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆனால், ஒரு சிலரோ, தைரியமான ஒருவராக ரன்வீர் இருப்பது குறித்துப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து ரன்வீர் பேசும்போது, “நான் 100 பேர் முன்பு கூட நிர்வாணமாக நிற்பேன். அது குறித்து எள்ளளவும் நான் கவலைப்பட்டதில்லை. ஆனால், சிறிது நேரம் கழித்து அங்கிருப்பவர்களுக்கும் பழகி விடும்” என்று கூறினார். அது குறித்தும் பலர் ரன்வீரைப் பாராட்டி வருகின்றனர்.

இருப்பினும், இது குறித்து வங்காள நடிகை மற்றும் எம்பி யான மிமி சக்கரபோர்த்தி (Mimi Chakraborty), ரன்வீர் சிங்கின் இந்த போட்டோஷூட் குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து பேசிய மிமி, “இதை ஒரு பெண் செய்திருந்தால், இதே போன்ற பதில்கள் வந்திருக்குமா?” என்று கேட்டார்.

இந்த கேள்வி இணையத்தில் படு வைரலாகி வர, பல வகையான கலவை விமர்சனங்களைப் பெற்று வருகிறார் ரன்வீர். இணையத்தில் தீயாய் பரவி வரும் ரன்வீர் சிங்கின் முயற்சி ஒரு சிலர் பெருமையானதாகப் பார்த்தாலும், ஒரு சிலர், முகம் சுளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com