ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா.? வைரல் புகைப்படம் 

ரீமா சென்னுக்கு இவ்வளவு பெரிய மகனா.? வைரல் புகைப்படம் 

ரீமா சென் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

தமிழ் திரையுலகில் காதல் கதாநாயகியாக வலம் வந்தவர் ரீமாசென். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. மின்னலே படத்தின் மூலம் ரீமாசென் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று பிரபலமானார். இப்படத்திற்காக இவருக்கு அறிமுக நடிகைக்கான விருதும் கிடைத்தது. 

அதன்பிறகு விஜய், விஷால் மற்றும் கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடனும் பல படங்களில் நடித்துள்ளார். பகவதி நடிப்பில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

கார்த்தி நடிப்பில் வெளியான ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் இவருக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டது இப்படத்தில் இவரது நடிப்பு பெரிதும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவர் கடைசியாக சட்டம் ஒரு இருட்டறை எனும் படத்தில் நடித்திருந்தார் இப்படம் பெரிய அளவில் வரவேற்பை பெறவில்லை அதன் பிறகு சினிமாவை விட்டு சிறிது காலங்கள் விலகியுள்ளார்.

ரீமா சென்தொழிலதிபர் சிவ் கரண் சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார் இவர்களுக்கு ஒரு ஆண் மகனும் உள்ளார். இவர்களது மகனுக்கு ருத்ர வீர் சிங் என பெயர் வைத்துள்ளனர். தற்போது இவர்களுடன் குடும்ப புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com