மனைவி பிறந்தநாளுக்கு காமெடி ரீலை வெளியிட்ட ரிதேஷ்; காதலை வெளிப்படுத்திய ஜெனீலியா:

காதல் திருமணம் செய்த சுட்டி நடிகை ஜெனிலியாவின் பிறந்தநாளையொட்டி, அவரது காதல் கணவர் ரிதேஷ், தனது இன்ஸ்டாக்ராமில் வீடியோ ஒன்று பதிவிட்டுள்ளார்.
மனைவி பிறந்தநாளுக்கு காமெடி ரீலை வெளியிட்ட ரிதேஷ்; காதலை வெளிப்படுத்திய ஜெனீலியா:
Published on
Updated on
1 min read

பாய்ஸ் என்ற படம் மூலம், தமிழ் திரையுலகிற்கு அறிமுகமான சுட்டித் தனமன நடிகை, ஜெனீலியா டிசோசா. கல்லூரிப் பருவத்தில் இருக்கும் இளைஞர்கள் வாழ்வியலை, எதார்த்தமாகவும், சிறிது பிரம்மாண்டத்துடனும் இணைத்து உருவாக்கிய் ஐந்த ஷங்கர் படம் மூலம், வசூல் எவ்வளவு ஆனதோ இல்லையோ, தமிழ் இளைஞர்களின் மனதைக் கொள்ளை அடித்து விட்டார் எனச் சொல்லலாம்.

பின் சில ஆண்டுகளுக்குப் பிறகு, பாலிவுட்டில் செட்டில் ஆன ஜெனீலியா, திடீரென, பிரபல பாலிவுட் நடிகர் ரிதேசைத் திருமணம் செய்துக் கொண்டார் என்ற தகவல் வெளியாகி, அவரது ரசிகர்களுக்கு மனமுடைந்து போனது என்றே சொல்லலாம்.

பல வகையான நகைச்சுவை வீடியோக்களை தங்களது சமூக வலைட்தளங்களில் வெளியிட்டு வரும் இந்த ஜோடி, இந்தியா முழுவதும் பல ரசிகர்களைப் பெற்றுள்ளது. இந்நிலையில், தனது பிறந்தநாளைக் கொண்டாடும் ஜெனீலியாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் ரிதேஷ் வெளியிட்டிருந்த வீடியோ தற்போது இணையத்தில் படு வைரலாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Ritesh Deshmukh (@riteishd)

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com