10 நாட்களில் சூப்பர் ஸ்டார் படத்தின் மொத்த வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர் .. எந்த படம்?

சூப்பர் ஸ்டார் படத்தின் மொத்த வசூலை 10 நாட்களில் ஆர்ஆர்ஆர் படம் முறியடித்துள்ளது.
10 நாட்களில் சூப்பர் ஸ்டார் படத்தின் மொத்த வசூலை முறியடித்த ஆர்ஆர்ஆர் .. எந்த படம்?
Published on
Updated on
2 min read

இயக்குனர் எஸ் எஸ் ராஜமவுலி இயக்கத்தில் ராம் சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் நடித்து வெளியான படம் ஆர்ஆர்ஆர். இப்படம் வெளியாகி பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துட்டு வருகிறது.

பாகுபலி படங்களின் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்திருக்கும் இயக்குநர் ராஜமௌலி, இந்தப் படத்திலும் ரசிகர்களை ஏமாற்றாமல் தனது சிறப்பான இயக்கத்தை காட்டி ரசிகர்களை மிரட்டியிருக்கிறார். RRR தற்போது இந்தியா முழுவதும் 5 மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகியுள்ளது. படத்தை ரசிகர்கள் தியேட்டரில் சென்று பார்த்து வருகின்றனர். மற்ற படங்கள் ரிலீஸ் ஆன நிலையிலும் அதையெல்லாம் பீட் செய்து வசூல் மழையை பொழிந்து வருகிறது ஆர்ஆர்ஆர் படம்.

கடந்த 10 நாட்களில் 819 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது இந்த படம்.  மேலும் இந்திய அளவில் அதிக வசூல் செய்த படங்களில் ஆர்ஆர்ஆர் படம் 6 வது இடத்தை பிடித்துள்ளது. . தங்கல், பாகுபலி2, பஜ்ரங் பாய்ஜான், சிக்ரெட் சூப்பர்ஸ்டார் மற்றும் பீகே ஆகிய படங்கள் முதல் 5 இடங்களில் உள்ளது.

தற்போது 10 நாட்களில் 6-வது இடத்திற்கு வந்துள்ள ஆர்ஆர்ஆர் படம்.. தொடர்ந்து திரையரங்குகளில் ஓடி கொண்டு வருகிறது. இந்நிலையில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 2.0 படத்தின் மொத்த வசூலான 800 கோடி ருபையை ஆர்ஆர்ஆர் படம் 10 நாட்களில் முறியடித்துள்ளது. மேலும் தொடர்ந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் ஆர்ஆர்ஆர் படம் 1000 கோடி ஈட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை...

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com