2023இல் திரையரங்குகளைத் தெரிக்க விட வருகிறது ‘சலார்’!!!

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கும் ‘சலார்’ படமானது, வருகிற 2023ம் ஆண்டு திரையரங்குகளுக்கு வருவதாக, அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
2023இல் திரையரங்குகளைத் தெரிக்க விட வருகிறது ‘சலார்’!!!
Published on
Updated on
1 min read

தென்னிந்திய படங்களுக்கான ஒரு முகப்பாக அமைந்த ‘கே.ஜி.எஃப்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அக்குழு அப்படியே இணைந்து உருவாக்கும் புதிய படம் தான் சலார்.

2018ம் ஆண்டு கன்னடத்தில் உருவாகி, தமிழ், தெலுங்கு என ஐந்து மொழிகளில் உலகம் முழுவதும் வெளியான வெற்றித் திரைப்படம் தான் ‘கே.ஜி.எஃப்’. பிரஷாந்த் நீல் இயக்கி, விஜய் கிரகண்டூரின் ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம், இரண்டு பாகங்களாக வெளியானது. அந்த படம் பல நூறு கோடி ஐந்து மொழிகளில் செய்ததோடு, மாபெரும் வசூல் சாதனையும் செய்தது.

இந்நிலையில், படத்தின் மூன்றாம் பாகமும் உருவாக இருப்பதாக திடீரென வந்த அப்டேட், அனைத்து சினிமா ரசிகர்களையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியதோடு, மாபெரும் வரவேற்பும் பெற்றது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து, படத்தில் ஒரு கதாபாத்திரம் சிறிதாக இருந்தாலும், நல்ல வரவேற்புப் பெற்றது. அது தான் சலார்!

அந்த கதாபாத்திரத்திற்கென்று தற்போது ஒஎரு தனி ‘Spin Off' உருவாக இருப்பதாகவும், அந்த கதையின் நாயகனாக, பிரபல பான் இந்தியா நட்சத்திரமான பாகுபலி பிரபாஸ் நடிக்க இருப்பதாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி பெரும் வரவேற்பு மக்களிடையே வெளியானது. இதனைத் தொடர்ந்து, tஹற்போது, சலார் படம், வருகிற செப்டம்பர் 28ம் தேதி, 2023ம் ஆண்டு வெளியாகவுள்ளதாக, ஹொம்பாலெ ஃபிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம், தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளது. இதனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இந்த படத்தில், கே.ஜி.எஃப் குழுவுடன், பிரித்விராஜ், ஷ்ருதிஹாசன், ஜகபதிபாபு, சிரியா ரெட்டி, ஆகியோரும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com