இந்திய சினிமாவையே அதிரவைக்கப்போகும் அதீரா!கே.ஜி.எப் 2 அப்டேட்...

அதிரடி செய்கைக்கு தயாரான சஞ்சே தத்!!! கே.ஜி.எப் 2 அப்டேட்!!!
இந்திய சினிமாவையே அதிரவைக்கப்போகும் அதீரா!கே.ஜி.எப் 2 அப்டேட்...
Published on: 
Updated on: 
1 min read

கே.ஜி.எப் 2 திரைப்படத்தில் சஞ்சே தத் நடித்துவருவது அனைவரும் அறிந்ததே. அவர் நடிக்கும் 'அதிரா' கதாபாத்திரத்தின் போஸ்டர் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. தற்பொழுது அப்படதிற்க்கான டப்பிங் பணிகள் அனைத்தையும் நிறைவு செய்து அதிரடியான ஆக்சனுக்கு தயாராகிவுள்ளார் சஞ்சே தத். 

சஞ்சே தத் தன்னுடைய அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தான் டப்பிங் ஸ்டுடியோவில் இருக்கும் ஒரு சில புகைப்படங்களைப் பகிர்ந்து 'மீண்டும் அதிரடியில் அதிரா' என்ற குறிப்புடன்  இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். கே.ஜி.எப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படத்தின் இரண்டாம் பாகம் இந்திய திரையுலகினர் பலராலும் பெரிதும் எதிர்பார்க்கப் படுகிறது. இப்படத்தில் சஞ்சே தத், யாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

கே.ஜி.எப் இரண்டாம் பாகம் தமிழ், தெலுகு, கன்னடம், மலையாளம், இந்தி உள்ளிட்ட ஐந்து மொழிகளில் அடுத்த ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி வெளியாகவுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com