ஜி பி முத்துவை கலாய்த்த நடிகர் சதீஷ்... ரிவீட் அடிச்ச நெட்டிசன்கள்... வைரல் ட்வீட்  

ஜி பி முத்துவை சதீஷ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கிண்டலடித்தார்.
ஜி பி முத்துவை கலாய்த்த நடிகர் சதீஷ்... ரிவீட் அடிச்ச நெட்டிசன்கள்... வைரல் ட்வீட்  
Published on
Updated on
1 min read

டிக் டாக் மூலம் பிரபலமானவர் தான் ஜி பி முத்து. தப்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள பிக் பாஸ் ஐந்தாவது சீசனில் கலந்துகொள்ளப் போவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வருகிறது.

இதுவரை தமிழில் நான்கு சீசன்கள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், ஐந்தாவது சீசனுக்கான போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். அத்துடன் இதுவரை இரண்டு ப்ரோமோ வெளியாகி ரசிகர்களிடையே பெரும் பரபரப்பையும் ஆர்வத்தையும் பிக்பாஸ் குழுவினர் ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஜி பி முத்து பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திலிருந்து புகைப்படம் எடுத்து வெளியிட்டதால், ரசிகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் காமெடி நடிகரான சதீஷ் நையாண்டி செய்து ஒரு பதிவு ஒன்று செய்திருந்தார். அதில் ஜி பி முத்துவை பிக்பாஸ் வீட்டில் டாஸ்க் கடிதத்தை மட்டும் படிக்க விடாதீர்கள்! ஏனென்றால், என்ன டாஸ்க் கொடுத்திருக்காங்க, நாற பயலுகளா, செத்த பயலுகளா என்று சொல்லிவிடுவார்’ என ஜி பி முத்துவை சதீஷ் தனது ட்விட்டர் பதிவின் மூலம் கிண்டலடித்தார். இவருக்கு நெட்டிசன்கள், படத்துல கூட இந்த மாதிரியான காமெடி பண்றது இல்லையே என்று பதிலடி கொடுத்துள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com