சேலம்: திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை!

சேலம்: திரையரங்கில் காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை!
Published on
Updated on
1 min read

சேலத்தில் உள்ள பிரபல திரையரங்கில் காலாவதியான உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் மாநகர் புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் என்ற திரையரங்கம்  உள்ளது. சமீப காலமாக இந்த திரையரங்கின் மீது அடுத்தடுத்த புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கூடுதல் விலைக்கு டிக்கெட் விற்பனை, காலாவதியான குளிர்பானங்கள் விற்பனை, என புகாரில் சிக்கி உள்ள ஏஆர்ஆர்எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கு தற்போது காலாவதியான சிப்ஸ் பாக்கெட்டுகள் விற்பனை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் லீ பஜார் பகுதியை சேர்ந்த தமிழரசன் என்பவர் தனது குடும்பத்தோடு படம் பார்ப்பதற்காக புதிய பேருந்து நிலையம் அருகே உள்ள ஏ ஆர் ஆர் எஸ் மல்டிபிளக்ஸ் திரையரங்கிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து குழந்தைகள் மற்றும் குடும்பத்தாருக்கு திரையரங்கில் விற்பனை செய்யப்பட்ட சிப்ஸ் பாக்கெட்டை வாங்கி கொடுத்துள்ளார். அப்போது அந்த சிப்ஸ் துர்நாற்றம் வீசியுள்ளது. பின்னர் திரைப்படம் முடிந்து வெளியே வரும்போது அந்த சிப்ஸ் பாக்கெட்டில் தயாரிப்பு தேதியை பார்த்த பிறகு தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்பாேது தான அவர்கள் வாங்கியது காலாவதியான சிப்ஸ் பாக்கெட் என தெரிய வந்துள்ளது. இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபர் சேலம் மாநகர் பள்ளப்பட்டி காவல் நிலையத்தில் திரையரங்கின் மீது புகார் கொடுத்துள்ளார் புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com