
செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் நானே வருவேன். இப்படத்தில் அப்டேட்டை இன்று அறிவிப்பதாக நேற்று தகவல் வெளியானது.
இந்த நிலையில் செல்வராகவன் தனது டுவிட்டர் பக்கத்தில் நானே வருவேன் படம் குறித்து அப்டேட் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு போஸ்டரை வெளியிட்டு, இடைவிடாத படப்பிடிப்பு இன்று முதல் என தெரிவித்துள்ளார்
தனுஷ், செல்வராகவன் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகிய கூட்டணி நீண்ட இடைவெளிக்கு பின்னர் மீண்டும் இணைந்துள்ளதை அடுத்து இந்தப் படம் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.