
மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு சிம்பு, கெளதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து கோகுல் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் படம் கொரோனா குமார். இப்படத்தை வேல்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது..
இப்படத்தின் நாயகியாக இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி நடிக்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
விரைவில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பைப் படக்குழு வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது அதிதி முத்தையா இயக்கும் விருமன் படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்து வருகிறார்.