'கூலி' படத்தின் ஷூட்டிங் எப்போது?

சூப்பர்ஸ்டார் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ் இணையும் 'கூலி' படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்
'கூலி' படத்தின் ஷூட்டிங் எப்போது?

நடிகர் ரஜினி நடித்துள்ள 170-வது படமான ‘வேட்டையன்’ படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கியுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இந்த படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

வேட்டையன் படத்தை முடித்துள்ள ரஜினி அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'கூலி' படத்தில் நடிக்க உள்ளார்.இப்படம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகிறது.இப்படத்திற்கும் அனிருத்தே இசையமைக்கிறார்.இப்படத்திற்கான அறிமுக வீடியோ சமீபத்தில் வெளியாகி வைரலானது.

அண்மையில், லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட 'கூலி' படத்தின் ரஜினி தோற்றமும் பேசுபொருளானது.

இந்த நிலையில், கூலி படத்தின் படப்பிடிப்பு வரும் 5ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.அங்கு,30 நாட்கள் படப்பிடிப்பு நடக்கும் எனவும் கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com