பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தயாரான சிம்பு : இணையத்தில் வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சிக்கு தயாரான சிம்பு : இணையத்தில் வேற லெவலில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!
Published on
Updated on
1 min read

பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் அடுத்தகட்டமாக தான் இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி உருவானது. இதுவரை பிக்பாஸ் நிகழ்ச்சி தொலைக்காட்சிகளில் மட்டும்தான் ஒளிபரப்பபட்டது. ஆனால் அதற்கு மாறாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும்  HOTSTAR-ல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியை நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வந்தார். இருப்பினும் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக திடீரென கமல்ஹாசன் அறிவித்து இருந்தார். அதற்கு காரணமாக, ’விக்ரம்’ படப்பிடிப்பு உள்பட பல பணிகள் இருப்பதால் தற்காலிகமாக விலகி கொள்வதாக அறிவித்திருக்கிறார் என்று தகவல் கூறப்பட்டது. 

இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை நடிகர் அர்ஜுன் அல்லது நடிகை ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் தொகுத்து வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை சிம்பு தொகுத்து வழங்க உள்ளதாக கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்ட தகவல் வெளியானது.

இதனைத்தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிம்பு மேக்கப் போடும் போது எடுத்த புகைப்படம் ஒன்று இணையதளங்களில் கசிந்துள்ளது. இந்தப் புகைப்படத்தை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் அவரின் போட்டோவை சோஷியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர். இதனைப் பாரத்த நெட்டிசன்கள் சிலர், ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் போல் மிகவும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை சிம்பு நடத்துவாரா? போட்டியாளர்கள் இடையே உள்ள பஞ்சாயத்துகளை சுமூகமாக தீர்த்து வைப்பாரா? என்ற கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com