அனிருத்தை திருமணம் செய்ய ஓகே சொன்ன பாடகி ஜொனிதா காந்தி..! காரணம் என்னன்னு தெரியுமா...!

இசையமைப்பாளர் அனிருத்தை திருமணம் செய்வதற்கு பாடகி ஜொனிதா காந்தி ஓகே சொல்லியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அனிருத்தை திருமணம் செய்ய ஓகே சொன்ன  பாடகி ஜொனிதா காந்தி..! காரணம் என்னன்னு தெரியுமா...!
Published on: 
Updated on: 
2 min read

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக விளங்கும் அனிருத் தன்னுடைய இசையால் அனைவரையும் கவர்ந்து தனக்கென்று ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். முதலில் ஒருசில ஹீரோக்களுக்கு மட்டும் இசையமைத்து வந்த இவர், படிப்படியாக உயர்ந்து தற்போது ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு இசையமைத்து வருகிறார். அதுவும் ஒரே நேரத்தில் இசையமைக்கிறார் அனிருத். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி படங்கள் வரை தன் இசையை வள்ளமையை காட்டி வருகிறார். இப்படி தன் பாடலாலும் இசையாலும் வளர்ந்து நிற்கும் இவர், சமீபத்தில் கமல் நடிப்பில் வெளியான ‘விக்ரம்’ படத்தில் அனிருத் போட்ட பின்னணி இசை மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அனிருத்தை திருமணம் செய்ய தனக்கு சம்மதமென பாடகி ஜொனிதா கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சமீபத்தில் ஜொனிதா காந்தி கலந்துக்கொண்ட நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் திருமணம் குறித்த கேள்வி எழுப்பப்பட்டது. கேள்விக்கு மூன்று ஆப்ஷன்ஸ் கொடுக்கப்பட்டது. அதாவது ‘ரன்வீர்சிங், சூர்யா, அனிருத் ஆகிய மூவரில் யாரை திருமணம் செய்து கொள்வீர்கள் என்று கேட்டுள்ளனர். அதற்கு பதிலளித்த ஜொனிதா காந்தி ‘சூர்யா, ரன்வீர்சிங் ஆகியோர்களுக்கு திருமணம் ஆகிவிட்டதால் அனிருத்தை திருமணம் செய்ய சம்மதம் என்று ஜொனிதா தெரிவித்தார். 

இதுவரை அனிருத் கம்போஸ் செய்த 5 பாடல்களுக்கு ஜொனிதா காந்தி பாடி உள்ளார். இவர்கள் கூட்டணியில் வெளிவந்த ‘அரபிக்குத்து’ பாடல் சூப்பர் ஹிட் அடித்தது. இப்படி இருவரும் சேர்ந்து தொடர்ந்து பணியாற்றியதால் அனிருத் மற்றும் ஜொனிதா காந்தி இருவரும் டேட்டிங்கில் இருப்பதாகவும் காதலித்து வருவதாகவும் திருமணம் செய்யப்போவதாகவும் வதந்திகள் வெளியான நிலையில் தற்போது ஜொனிதா காந்தி அவரைத் திருமணம் செய்துகொள்ள சம்மதம் என கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இவரின் இந்த பதிலையடுத்து அனிருத் - ஜொனிதா காந்தி ஜோடி பொருத்தமாக இருக்கும் என்றும் இவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டால் சிறந்த ஜோடியாக இருப்பார்கள் என்று ரசிகர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com