கொச்சியில் நடைபெற்ற 70வது தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள் விழாவில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட சினிமாவின் சிறந்த படைப்புகள் கவுரவிக்கப்பட்டன. ‘அமரன்’ மற்றும் ‘புஷ்பா 2’ போன்ற படங்கள் முக்கிய விருதுகளை வென்றுள்ளது.
2024 ஆம் ஆண்டு வெளியான அமரன் திரைப்படம் ராஜ்குமார் பெரியசாமி எழுதி இயக்கிய பிரோகிராபி படமாகும். சிவகார்த்திகேயன் மேஜர் முகுந்த் வரதராஜனாகவும் ,சாய் பல்லவி முகுந்தின் மனைவி இந்து ரெபேக்கா வர்கீஸாகவும் நடித்திருந்தனர். True Stories of Modern Military Heroes எனும் புத்தகத்தை தழுவி எடுக்கபட்ட திரைப்படம். மேலும் வெளியான சில நாட்களிலே ரசிகர்களின் மனதை வென்றது மட்டுமல்லாமல், பரவலான பாராட்டை பெற்று அதிகபட்ச வசூல் செய்த படமாகவும் இருந்தது.
இதற்க்கு முன் பல விருதுகளை வென்று வந்த அமரன் திரைப்படம் தற்போது கொச்சியில் நடந்த 70-வது பிலிம்பேர் விழாவில் மொத்தமாக 8 விருதுகளை தன் வசப்படுத்தியுள்ளது. சிறந்த திரைப்படம், சிறந்த இயக்குனர், சிறந்த நடிகர், சிறந்த நடிகை. சிறந்த இசை ஆல்பம், ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி பாடகர் மற்றும் சிறந்த பின்னணி பாடகி என்ற 8 பிரிவுகளின் கீழ் விருதுகளை பெற்றுஉள்ளது.சர்வதேச திரைப்பட விருதுகளுக்கு நாமினேட் ஆனது குறிப்பிடத்தக்கது.
அமரன் திரைப்படம் விருதுகளை வென்றதையடுத்து படக்குழுவினர் சமூக வலைதங்களில் பதிவிட்டு வாழ்த்துக்களையும் மகிழ்ச்சிகளையும் தெரிவித்துவருகின்றனர். இதனையடுத்து இத்திரைப்படத்தை தயாரித்த ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனமானது தனது சமூக வலைதளப் பக்கத்தில், விருதுகளை வென்றது மகிழ்ச்சியாகவும் பெருமிதமாகவும் இருப்பதாக குறிப்பிட்டு சிறப்பு வீடியோ வெளியிட்டுள்ளது. விருது வென்ற படக்குழுவினர் பெயரைக் குறிப்பிட்டு அந்த வீடியோ உருவாக்கப்பட்டுள்ளது மேலும் அதே போல் படத்தின் சில காட்சிகளும் அண்ட் சிறப்பு வீடியோவில் இடம் பெற்றுள்ளது.
மேலும் சில தமிழ் திரைப்படகளும் விருதுகளை வென்று அசத்தியுள்ளது. அரவிந்த் சாமி மற்றும் கார்த்தி நடிப்பில் வெளியான மெய்யழகன் திரைப்படம் 4 விருதுகளையும், லப்பர் பந்து, கொட்டுக்காளி மற்றும் தங்கலான் திரைப்படத்திற்காக விக்ரமிற்கு சிறந்த நடிகருக்கான விருதும் கிடைத்துள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.