"நான் ஒரு இடத்துல கூட ஏந்திரிக்கல.." - ரஜினிகாந்த் போல பேசிக்காட்டிய சூரி!

ரஜினிகாந்த் போலவே கேட்டு அதற்கு அவர் பதிலளித்த விதத்தையும் மேடையில் நடித்துக்காட்டினார்.
"நான் ஒரு இடத்துல கூட ஏந்திரிக்கல.." - ரஜினிகாந்த் போல பேசிக்காட்டிய சூரி!
"நான் ஒரு இடத்துல கூட ஏந்திரிக்கல.." - ரஜினிகாந்த் போல பேசிக்காட்டிய சூரி!
Published on
Updated on
1 min read

சூரி நடிப்பில் வெளியான மாண்டாடி திரைப்படம் மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ராமநாதபுரம் பின்னணியில் நடக்கும் கதையில் கச்சிதமாக பொருந்தியதாக பாராட்டப்பட்டார்.

ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரையுலக்கினரும் சூரியின் நடிப்பை மெச்சினர். அந்தவகையில் நடிகர் ரஜினிகாந்த் சூரியை வாழ்த்தியுள்ளார்.

இதுகுறித்து நெகிழ்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட சூரி, "சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சார் நமது #மண்டாடி திரைப்படத்தைப் பார்த்து ரசித்தார். அவருடைய அழைப்புதான் எனக்கும் எங்கள் முழு குழுவுக்கும் எல்லாமே...

அவருடைய வார்த்தைகள் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய ஆசீர்வாதம்!" எனப் பதிவிட்டிருந்தார்.

படத்தின் வெற்றிவிழாவில் இது குறித்து பேசுகையில் ரஜினிகாந்த் போலவே பேசி காட்டினார் சூரி. "சூரி எப்படி? எப்படி? எப்படி? ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்குல எப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு எப்படி பண்ணீங்க?" என ரஜினிகாந்த் போலவே கேட்டு அதற்கு அவர் பதிலளித்த விதத்தையும் மேடையில் நடித்துக்காட்டினார்.

மேலும், "ரொம்ப ரொம்ப நல்லாச்சு. ரொம்ப நல்லாச்சு. நான் ஃபுல்லாவே உட்கார்ந்து பார்த்துட்டு இருந்தேன். நான் ஒரு இடத்துல கூட எந்திருக்கவே இல்லை. அவ்வளவு சூப்பரா இருந்துச்சு. ரொம்ப ஃபெண்டாஸ்டிக்! ஃபெண்டாஸ்டிக்! ஃபெண்டாஸ்டிக்!

முழு டீமுக்கும் வாழ்த்து சொல்லி இருக்கேன். ஸ்டண்ட் பீட்டர் கயினா? பீட்டர் கயினா?" என ரஜினி ஆர்வமாக கேட்டது போல பேசினார் சூரி.

"நான் ஒரு இடத்துல கூட ஏந்திரிக்கல.." - ரஜினிகாந்த் போல பேசிக்காட்டிய சூரி!
“தமிழ்நாட்டு மண்ணில் இந்தி.. மனநிலையை மாற்றுங்கள்!” - உச்ச நீதிமன்றம் சொன்னது என்ன?

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com