ராணுவத்தில் இணைந்த கே-டிராமா பிரபலம்! மீண்டும் நடிக்க வர வாய்ப்பிருப்பதாகத் தகவல்!!!

ராணுவத்தில் இணைந்த கே-டிராமா பிரபலம்! மீண்டும் நடிக்க வர வாய்ப்பிருப்பதாகத் தகவல்!!!
Published on
Updated on
2 min read

இந்திய பெண்களுக்கு, இந்திய படங்களை விட கொரியன் படங்கள் மற்றும் நாடகங்களை தான் விரும்பி பார்க்கின்றனர். வாழ்வியல்களில் பல வகைகளை மிக அழகாக காட்டி இருக்கிறது கொரிய நாடகங்கள். குறிப்பாக, காதல் என்பது எவ்வளவு இனிமையானது என்பதை கொரிய நாடகங்கள் தான் காட்டுகிறது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அந்த நாடகங்கள் மூலமாக, அந்த நாடகத்தின் கதாபாத்திரங்கள் மீது காதல் கொண்டு, அந்த கதாபாத்திரமாக நடித்த நடிகர்கள் மீதும் அன்பு காட்டி, வெறி கொண்ட ரசிகர்களாக மாறி வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக, சமீபத்தில் வெளியாகி உலகளவில் பிரசித்தி ஆனது, “ஸ்குவிட் கேம்” என்ற கொடூர கதை தான். பணத்திற்காக கொல்லும் அளவிற்கு கூட தட்யங்காத கூட்டத்திற்கு இடையில் நடக்கும் ஒரு விளையாட்டாக உருவாக்கப்பட்ட இந்த நாடகம், பல விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், தற்போது, கொரிய நடிகர் ஒருவர், ராணுவத்தில் இணைந்துள்ளதாக வெளியான தகவல், கே-டிராமா ரசிகர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்கொரியாவைச் சேர்ந்த காங் தேய்-கோ என்ற நடிகர், “Extraordinary Attorney Woo”  என்ற நாடகம் மூலமாக பிரபலமானவர். பிரபல சேவை தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-இல் உள்ள இந்த டிராமா, கொரோனா தொடங்கி மீண்டும் பிரபலமானதை அடுத்து, தேய்-கோ விற்கு ரசிகர் கூட்டம் அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம்.

இதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 20ம் தேதி, தேய்-கோ ராணுவத்தில் பதிவு செய்துக் கொண்டார். 28-30 வயதுக்கு உட்பட்ட பிரிவில் குறைந்தது 18 மாதங்கள் கடுமையான பயிற்சி செய்த பிறகே தேர்ந்தெடுக்கப்படுவர் என்ற நிலையில், தென் கொரிய ராணுவத்தில் தன்னை பதிவு செய்து கொண்ட தேய்-கோ விற்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

வருகிற 2024ம் ஆண்டு வரை பணியில் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், ராணுவத்தில் இருந்து வெளி வந்த உடன், மீண்டும் நடிப்பில் களமிறங்க இருப்பதாகவும், தான் நடித்த “Extraordinary Attorney Woo” வின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பத்திரிக்கையாளர்கள் மூலம், ரசிகர்களை சந்திக்கும் போது, தனது மிலிட்டரி ஹேர்கட்டை வெளிப்படுத்திய நிலையில், ரசிகர்கள் அதிர்ச்சியில் உரைந்துள்ளனர். இதன் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, ரசிகர்கள் மன கஷ்டத்தில் இருப்பதாகவும், இருந்தாலும், அவரது விருப்பத்திற்கு ஆதரவளிப்பதாகவும் தெரிவித்து பதிவிட்டு வருகின்றனர்.

--- பூஜா ராமகிருஷ்ணன்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com