
சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
சந்திரயான்-3 விண்கலம், சுமார் 3 லட்சத்து 84 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நிலவை நோக்கிய தனது பயணத்தை தொடங்கியது.
இந்த நிலையில், சந்திரயான்-3 விண்கலம் குறித்து கவிஞர் வைரமுத்து தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், ”சந்திரயான் 3 விண்ணில் நிலைநிறுத்தப்பட்டதில் இந்திய விஞ்ஞானிகளை அண்ணாந்து பார்க்கிறது அகிலம்”, எனவும் ஆகஸ்ட் 23 அது தடுமாறாமல் தடம் மாறாமல் நிலாத் தரையில் இயங்க வேண்டும் என கூறியுள்ளார்.