
சீரியலில் நாயகி ஷபானாவுக்கும் அவரது காதலன் ஆர்யனுக்கும் திருமணம் நடைபெற உள்ளது.
தொலைக்காட்சி சீரியலில் கதாநாயகி நடித்து வரக்கூடியவர் தான் நடிகை ஷபானா. இவருக்கும் இவரது நடிப்பிற்கும் பல கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர் என்றே கூறலாம்.
மற்றொரு சீரியலில் நடிக்கும் ஆர்யன் என்பவரை காதலித்து வந்தார். இந்நிலையில் ஷபானாவுக்கும், ஆர்யனுக்கும் இன்று திருமணம் நடைபெற உள்ளது.
இது தொடர்பான அறிவிப்புகள் முன்னமே எதுவும் வெளியிடப்படாவிட்டாலும் ஷபானா இன்று தான் திருமணம் செய்து கொள்ளப்போவதாக தனது அதிகாரபூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.