நடிகை காஜல் அகர்வாலின் கோடைக்கால புகைப்படம் இணையத்தில் வைரல்!

நடிகை காஜல் அகர்வாலின் கோடைக்கால புகைப்படம் இணையத்தில் வைரல்!

நடிகை காஜல் அகர்வாலின் கோடைக்கால புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
Published on

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னனி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், “பழனி”  படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரிட்சயம் ஆனார்.  அதன் பின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து வந்த இவர், அடுத்தடுத்து விஜய், அஜித், சூர்யா, தனுஷ் என முன்னணி ஹீரோக்களுடன் இணைந்து நடித்து பிரபலமானார். இப்படி அடுத்தடுத்து சினிமா வாழ்கையில் பிஸியாக இருந்த காஜல் கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபர் கவுதம் கிச்லுவை திருமணம் செய்துக்கொண்டார். இந்த தம்பதிக்கு சமீபத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு நீல் கிட்சலு என்ற பெயர் சூட்டியுள்ளதாக சமூக வலைதளத்தில் அறிவித்தனர்.

குழந்தை பிறந்து சில நாட்களே ஆகியுள்ள நிலையில் நடிகை காஜல் அகர்வால் தற்போது மீண்டும் கிளாமருக்கு மாறி புகைப்படத்தை வெளியிட்டு இருப்பது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு கேப்ஷனாக கோடை காலத்தில் அதிக வெப்பநிலை உள்ளது என்று மட்டும் அவர் பதிவு செய்துள்ளார். இருப்பினும் இந்த புகைப்படம் பதிவிட்ட ஒரு மணி நேரத்திலேயே லட்சக்கணக்கில் லைக்ஸ் குவிந்து வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com