தமிழ் சினிமாவை கலக்க வருகிறார் சன்னிலியோன், தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது 'ஓ மை கோஸ்ட்'

தமிழ் சினிமாவை கலக்க வருகிறார் சன்னிலியோன், தமிழ் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது 'ஓ மை கோஸ்ட்'
Published on
Updated on
1 min read

கடந்த வராம் வெளியான 'ஓ மை கோஸ்ட்' மக்களின் மனதில் சிறந்த இடத்தை பிடித்திருக்கிறது . 2009இல் வெளியான சிந்தனை செய்  படத்தின் இயக்குனர் யுவன் இந்த  ஓ மை கோஸ்ட்டையும்   இயக்கியுள்ளார். இதில் முக்கிய கதாபாத்திரமாக  சன்னிலியோன் ,சதீஸ்,மொட்டை ராஜேந்திரன், தர்ஷா குப்தா ,ரமேஷ் திலக் ,ஜீ பி முத்து மற்றும் யோகிபாபு  இணைந்து  நடித்துள்ளனர்.   பயம்,  நகைச்சுவை என்று  நண்பர்களுடன் பொழுதுபோக்க ஒரு நல்ல படமாக விளங்குகிறது .

ஓ மை கோஸ்ட்  கதைக்களம்

ஆண்கோண்டபுரம் என்ற கிராமத்தில் உலாவிக் கொண்டிருக்கும்  பேயிடம் இருந்து  அந்த  மக்கள் எப்படி தப்பிக்கின்றனர் என்பதை வித்தியாசமாக  கூறிய படம் தான் இந்த ஓ மை கோஸ்ட். இந்த படத்தின் கதாநாயகன் சதீஷ் மற்றும் அவரது நண்பர் இருவரும் A  படம் இயக்கிவருகின்றனர் .இவரை பார்க்கவரும் தர்ஷாவின் உடம்பில் பேய் புகுந்துவிடுகிறது .மேலும் தன்னை ஆண்கோண்டபுரத்திற்கு கூட்டிசெல்லுமாறு கேட்கிறது  .அங்கிருந்து தான் கதை  விறுவிறுப்பாக மாறுகிறது .முதல் பாதியில்  காமெடி  அதிகமாக காணப்படுகிறது .மேலும் சன்னியின் இந்த மஹாராணி வேடம் அவருக்கு மிக பொருத்தமாக அமைந்திருக்கிறது எப்போதும் வெகுளியாக நடித்துவந்த சன்னி இந்த படத்தில் கம்பிரமான ஒரு ராணியாக  காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறார்  .மேலும் அவருக்கு கொடுத்த பாகத்தை  அழகாக  நடித்திருக்கிறார். இந்த படத்திற்கு கிராபிக்ஸ்  காட்சிகள் அதிகமாக காணப்படுகிறது மற்றும் டப்பிங் சரியாக பொருந்தவில்லை என்பதே  படத்தின் சிறிய குறையாக இருக்கிறது .அனைத்து  நட்சத்திரங்களும் தனக்கு கொடுக்கப்பட்ட  கதாபாத்திரத்தை பக்காவாக செய்ந்திருக்கின்றனர்.மேலும்  ஜி பி முத்துவிற்கு ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருந்த நிலையில் சிறுதுநேரமே  திரையில் தோன்றனர் .மாநகரம் ,அன்பிற்கினியால் போன்ற படங்களுக்கு இசையமைத்த  ஜாவேத் ரியாஸ் இந்தப்படத்திற்கு இசைஅமைத்துள்ளார் மேலும் படத்தில் 18+ வசனங்கள் இருப்பதால் குடும்பத்தோடு பார்ப்பது என்பது சிறிது சந்தகேம்தான்  இருப்பினும்     நண்பர்களுடன் சேர்ந்து பொழுதுபோக்க நல்ல படமாக தெரிகிறது இந்த ஓ மை கோஸ்ட் .

சுவாதிகா ரெங்கராஜன் .

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com