“மக்களை மகிழ்விக்க கைகோர்க்கும் இரண்டு நிகழ்ச்சிகள்” - சமையலோடு சேர்ந்து ஒலிக்கும் சங்கீதம்.. சூப்பர் சிங்கர் மற்றும் CWC மெகா சங்கமம்!

சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது.
Super Singer Season 11 & Cooku with Comali Mega Sangamam
Super Singer Season 11 & Cooku with Comali Mega Sangamam
Published on
Updated on
2 min read

தமிழ் தொலைக்காட்சி வரலாற்றில் மக்களை வெகுவாக கவர்ந்திழுத்த இரண்டு நிகழ்ச்சிகள், சூப்பர் சிங்கர் மற்றும் குக் வித் கோமாளி. இந்த வாரம் இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் ஒன்றாக இணையும் ஒரு மெகா சங்கமம், தொலைக்காட்சி வரலாற்றில் முதல் முறையாக நிகழவுள்ளது.

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வருகிறது அதே போல ஒரு சமையல் போட்டி நிகழ்ச்சியை புதுவிதமான நையாண்டியுடன் அணுகிய, குக் வித் கோமாளி நிகழ்ச்சி, 6 வது சீசனை கடந்து, ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று நடந்து வருகிறது.

பட்டி தொட்டியெங்கும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இந்த இரண்டு நிழச்சிகளின் பங்கேற்பாளர்களும் ஒன்றாக பங்கேற்க, “சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்” எனும் நிகழ்ச்சி இந்த வார இறுதியில் ஒளிப்பரப்பாகவுள்ளது.

Super Singer Season 11 & Cooku with Comali Mega Sangamam
Super Singer Season 11 & Cooku with Comali Mega Sangamam

சூப்பர் சிங்கரின் பிரபல பாடகர்களும், குக் வித் கோமாளியின் கோமாளி நகைச்சுவை வித்தகர்களும், ஒன்றாக வந்து கலக்கும் புரமோ வீடியோக்கள், இப்போது இணையமெங்கும் வைரலாக பரவி, பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

குக்வித் கோமாளியில் செய்ய வேண்டிய டிஷ்சை, பாட்டுப்பாடி அதிலிருந்து போட்டியாளர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதும், போட்டியாளர்களோடு சூப்பர் சிங்கர் போட்டியாளர்களின் அடாவடியும் அடங்கிய புரமோ மற்றும் சூப்ப சிங்கர் போட்டியின் ஜட்ஜான இயக்குநர் மிஷ்கினின் பிறந்த நாளை, அனைவரும் ஒன்றிணைந்து கொண்டாடி அவரை நெகிழ வைக்கும் புரமோ என, இந்த வீடியோக்கள் நிகழ்ச்சியின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைக்கிறது.

பல பல புதுமைகளை படைத்து வரும் விஜய் தொலைக்காட்சி இப்போது ரசிகர்களை மகிழ்விக்கும் இந்த சங்கமத்தை முன்னெடுத்து, அசத்தியுள்ளது.

இனிமையான இசையும், நகைச்சுசை சரவெடியும் ஒன்றாக கலக்கும் சங்கமத்தை காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

“சூப்பர் சிங்கர் சீசன் 11 & குக் வித் கோமாளி மெகா சங்கமம்”, வரும் செப்டம்பர் 21 மற்றும் 22 தேதிகளில் சனி, ஞாயிறு கிழமைகளில், மாலை 6.30 மணிக்கு, விஜய் தொலைக்காட்சி மற்றும் ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் கண்டுகளியுங்கள் !!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com