பிரபல திரைப்பட நடிகர்களான சூர்யா மற்றும் ஜோதிகா முதல் டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கும் விதமாக மத்திய மாநில அரசுகள் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன. பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், திரைப்பிரபலங்களும், மக்களும் ஆர்வமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவியும் நடிகையுமான ஜோதிகா ஆகியோர் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இருவரும் முதல் டோஸை செலுத்திக்கொண்டனர். மேலும் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். தடுப்பூசி போடும் புகைப்படத்தை அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.