கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த சூர்யா!

கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தில் சம்பளம் வாங்காமல் நடித்து கொடுத்த சூர்யா!

கமல்ஹாசனின் விக்ரம் படத்தில் நடித்தற்கு, நடிகர் சூர்யா சம்பளம் வாங்கவில்லை எனத் தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன், விஜய்சேதுபதி 'விக்ரம்'. கமல்ஹாசன் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ள விக்ரம் படத்தில், சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ளார்.

அனிருத் இசையில் பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான 'விக்ரம்' திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, சூர்யாவின் ரோலெக்ஸ் கதாபாத்திரம் மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இப்படத்தில் ஐந்து நிமிடங்களே வரும் காட்சியில் நடிப்பதற்காக, ஒரு நாள் கால்ஷீட் கொடுத்த சூர்யா, சம்பளமே வாங்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com