டான்ஸ்ஸில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் தமன்னா..! வெளியானது ’கானி’ யின் ஐட்டம் பாடலின்!

’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஐட்டம் டான்ஸ் ஆடிய தமன்னா...!
டான்ஸ்ஸில் சமந்தாவுக்கே டஃப் கொடுக்கும் தமன்னா..! வெளியானது ’கானி’ யின் ஐட்டம் பாடலின்!
Published on
Updated on
1 min read

சமீப காலமாகவே முன்னணி நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடுவது என்பது ட்ரெண்டாகி வருகிறது. அந்த வகையில்  கடந்த ஆண்டு வெளியான ‘புஷ்பா’ திரைப்படத்தில் இடம்பெற்ற  ‘ஊ சொல்றியா மாமா’ பாடலுக்கு நடிகை சமந்தா டான்ஸ் ஆடியது செம ஹிட்டானது. அந்த வரிசையில் அடுத்ததாக ஆச்சார்யா திரைப்படத்தில் ரெஜினாவும், லெஜண்ட் சரவணன் படத்தில் லட்சுமிராய் உள்பட ஒரு சில நடிகைகளும் ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடி வந்துள்ளனர். 

இதனையடுத்து ’கானி’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் தமன்னா ஐட்டம் டான்ஸ் ஆடி உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளிவந்தது. மேலும் இந்த பாடலின் லிரிக் வீடியோ ஏற்கனவே வெளியான நிலையில் தற்போது இந்த பாடலின் முழு வீடியோ வெளியாகியுள்ளது.

இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் புஷ்பா திரைப்படத்தில் சமந்தாவின் நடனத்துக்கு டஃப் கொடுக்கும் வகையில் தமன்னாவின் டான்ஸ் இந்த பாடலில் இருப்பதாக கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது இந்த நான்கு நிமிட பாடலின் வீடியோ தான் இணையதளங்களில் படு வைரலாக வருகிறது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com