இறந்தும் இப்படி ஒரு நிலைமையா? உடலை பார்க்க மறுப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்.. ஆதரவின்றி கிடக்கும் தமிழ் நடிகர் அபிநய் உடல்!

விளம்பரங்கள் கூட ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது...
இறந்தும் இப்படி ஒரு நிலைமையா? உடலை பார்க்க மறுப்பு தெரிவித்த வீட்டு உரிமையாளர்.. ஆதரவின்றி கிடக்கும் தமிழ் நடிகர் அபிநய் உடல்!
Published on
Updated on
2 min read

தனுஷ் நடித்து வெளியான முதல் படமான துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகி தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை வைத்திருந்தவர் நடிகர் அபிநய். இந்த படம் வெளியான காலகட்டத்தில் கதாநாயகனாக தனுஷை விட மக்களால் அபிநய் மிகவும் வரவேற்கப்பட்டார். அதனை தொடர்ந்து தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் ஜங்க்ஷன், சொல்ல சொல்ல இனிக்கும், சித்ரா கூடம்,கெயேதம் தூரத்,கார்த்திக் அனிதா, கதை, ஆரோகணம், ஆறுமுகம் ,பாலைவனச்சோலை உள்ளிட்ட இருப்பதும் மேற்பட்ட படங்களில் நடித்திருந்தார்.

அதுமட்டுமல்லாமல் ஓரியோ பிஸ்கட், திரிரோசஸ், ஆகிய முன்னிலை நிறுவனங்களின் விளம்பரங்களிலும் நடித்திருக்கிறார். இவரது விளம்பரங்கள் கூட ரசிகர்களிடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றிருந்தது. பின்னர் படவாய்ப்புகள் கிடைக்காமல் வேலையில்லாமல் இருந்த நிலையில் அவரது தாயின் இறப்பு அவரது வாழ்க்கையை பெரிதும் பாதித்தது, அபிநய் அவரது தாய் இறந்த பிறகு மிகுந்த வறுமையில் தனது காரை விற்று அம்மா உணவகத்தில் உணவருந்தி மிகுந்த துயரத்தை அனுபவித்ததாக அவரே ஒரு நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

பின்னர் அவருக்கு கல்லீரல் அழற்சி நோய் ஏற்பட்டு உடல் மெலிந்து உடல் நல பிரச்சனையால் அவதிப்பட்டு சிகிச்சைக்கு கூட பணம் இல்லாமல் தவித்து வந்த நிலையில் பல்வேறு திரை பிரபலங்கள் உதவி செய்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு சின்னத்திரை நடிகர் பல சென்று பண உதவி செய்த போதும் கூட “நான் இறந்துவிடுவேன் ஏற்கனவே எனது இறப்புக்கு மருத்துவர்கள் நேரம் குறித்து விட்டார்கள்” என தெரிவித்தது அவரது ரசிகர்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி இருந்தது.

கவனிக்க கூட உடன் உறவினர்கள் நண்பர்கள் என யாரும் இல்லாத சூழ்நிலையில் வீடு நடிகைக்கு எடுத்து வசித்து வந்த அபிநய் கல்லீரல் அழற்சி முற்றிய இலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று (நவ 10) அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். தற்போது அவரது உடல் இருக்கும் வீட்டிற்கு யாரும் வரக்கூடாது என வீட்டின் உரிமையாளர் பிரச்சனை செய்து வரும் நிலையில் அவரது நண்பர்கள் சிலர் போலீஸ் மற்றும் மீடியா உதவியை நாடியுள்ளனர். மேலும் அவரது உடலுக்கு இறுதி மரியாதையை செய்து அடக்கம் செய்ய நடிகர் சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் முன்வந்து உதவி செய்யும் என எதிர்பார்க்க படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com