தமிழில் வேட்டையாட கிளம்பிய சிம்பு, தெலுங்கில் தாமதமாக கால் பதிப்பார்!!!

வெந்து தணிந்தது காடு படத்தின் தெலுக்கு பதிப்பு நாளை வெளியாகாது என தகவல்கள் கூறுகின்றன.
தமிழில் வேட்டையாட கிளம்பிய சிம்பு, தெலுங்கில் தாமதமாக கால் பதிப்பார்!!!
Published on
Updated on
1 min read

ஐசரி கணேஷ் - வேல்ஸ் இண்டெர்நேஷனல் தயாரிப்பில் கௌதம் வாசுதேவ் மெனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படம் நாளை வெளியாக இருக்கிறது. தமிழில் இரண்டு பாகங்களாக உருவான இந்த படத்தின் முதல் பாகம் நாளை வெளியாக இருக்கும் நிலையில், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக தகவல்கள் வெளியாகி, மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கியது என்று தான் கூற வேண்டும்.

ஆனால், சமீபத்தில், வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீடு குறித்து பல சர்ச்சைகள் கிளம்பின. ஏற்கனவே, சிம்பு படம் என்றாலே எப்போதும் பிரச்சனை தான் என்ற பெயர் உருவானதை அடுத்து, கோர்ட்டு கேஸ் என சுற்றித் திரிந்தது படத்தின் வெளியீடு குறித்த பதற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில், படத்தின் வெளியீடு எவ்விதத்திலும் மாறாது என மன்றம் உத்தரவிட்டதை அடுத்து, ரசிகர்களுக்கு பொரு பெருமூச்சே வந்தது. ஆனால், படம் தமிழில் மட்டுமே வெளியாகும் என்றும் தெலுங்கில் நாளை கண்டிப்பாக வெளியாகாது எனவும் தகவல்கள் வெளியாகியுள்லதால் மேலும் சர்ச்சை கிளம்பியுள்ளது.

“The Life Of Muthu” என தலைப்பு வைக்கப்பட்ட இந்தப் படத்திற்கும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். “The Life Of Muthu” என்ற தலைப்பு வேறொரு தெலுங்கு தயாரிப்பாளரிடம் இருந்தது. அதை தற்போது விலை கொடுத்து வாங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | யாரா இருந்தாலும் காசு கொடுத்தா தான் தீனி!!!- பாகம் 1 தானா? எத்தனை பாகங்கள் இன்னும் இருக்கிறதோ?

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com