தளபதி 69 : ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா குஷி ஆகிவிடுவீங்க

தளபதி 69 : ஹீரோயின் யாருன்னு தெரிஞ்சா குஷி ஆகிவிடுவீங்க

நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகியுள்ள 'கோட்' படத்தில் நடித்துள்ளார்.செப்டம்பர் மாதம் திரைக்கு வரும் இப்படத்தில் தந்தை - மகன் என இருவேடங்களில் நடித்துள்ளார் விஜய்.இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடந்து வரும் நிலையில், நடிகர் விஜய்யின் 69வது திரைப்படம் குறித்து சில தகவல்கள் வெளியாகிவுள்ளது.

அதன்படி,விஜய்யின் 69வது படத்தை சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை,வலிமை, துணிவு ஆகிய படங்களை இயக்கிய எச்.வினோத் இயக்குவதாக கூறப்பட்டது.இந்த தகவல் ஓரளவுக்கு உறுதியாகிவிட்ட நிலையில்,இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக சமந்தா நடிக்கயிருப்பதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது.ஏற்கனவே, விஜய்யுடன் கத்தி,தெறி,மெர்சல் ஆகிய படங்களில் சமந்தா நடித்த நிலையில்,நான்காவது முறையாக இணையவுள்ளார். இப்படம் அனிருத் இசையில் உருவாகவுள்ளது.பிரபல கன்னட தயாரிப்பு நிறுவனமான கே.வி.என் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com